Saturday, 21 December 2024

களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

தோற்றுவாய்

கடைச்சங்க காலத்துக்குப் பிறகு தமிழகத்தின் அரசியல் நிலைமை இன்னதென்று தெரியாமல் சரித்திரத்தில் 'இருண்ட கால' மாக இருந்தது. கடைச்சங்க காலத்தின் முடிவு ஏறத்தாழ கி.பி. 250 என்று கருதப்படுகிறது. கடைச்சங்க காலத்தின் இறுதியில் இருந்த சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் பெயர்கள் சங்கச் செய்யுட்களிலிருந்து கிடைக்கின்றன. சங்க நூல்களில் காணப்படுகிற கடைசி சேர அரசன் பெயர் கோக்கோதைமார்பன் என்பது. இவனைக் கோதை என்றும் கூறுவர். கோக்கோதை மார்பன், சேரன் செங்குட்டுவனுடைய மகன் இவன் சிறுவனாக இருந்தபோது இவனுக்குக் குட்டுவன் சேரல் என்று பெயர் இருந்தது. தன் மேல் பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்துப் பாடிய பரணருக்குச் செங்குட்டுவன் உம்பர்காடு என்னும் நாட்டின் வருவாயையும் தன்னுடைய மகன் குட்டுவன் சேரலையும் பரிசாகக் கொடுத்தான் (பதிற்றுப் பத்து, ஐந்தாம் பத்துப் பதிகத்தின் அடிக்குறிப்பு)

-

புலவராகிய பரணருக்குச் செங்குட்டுவன் தன்னுடைய மகனான குட்டுவன் சேரலைப் பரிசாகக் கொடுத்தான் என்பதன் பொருள், புலவரிடத்தில் கல்வி கற்பதற்கு மாணாக்கனாகக் கொடுத்தான் என்பதாகும். இளமையில் குட்டுவன் சேரல் என்று பெயர் பெற்றிருந்த இவன் முடிசூடின பிறகு கோக்கோதை மார்பன் என்று பெயர் பெற்றான் என்று அறிகிறோம்.

களப்பிரர் ஆட்சியில் தமிழகம் - மயிலை சீனி. வேங்கடசாமி y

கடைச்சங்க காலத்தில் கொங்கு நாட்டைச் சேர அரசர் களின் இளைய வழியினரான பொறையர் அரசாண்டார்கள் கொங்கு நாட்டையரசாண்ட கடைசிப் பொறையன் கணைக் கால் இரும்பொறை. இவன் கோக் கோதை மார்பனுடைய தாயாதி உறவினன். இருவரும் சம காலத்தில் இருந்தவர்கள். கணைக்காலிரும் பொறை, சோழன் செங்கணானோடு போர் செய்து தோற்றுப் போரில் பிடிக்கப்பட்டுச் சிறை வைக்கப் பட்டான். பிறகு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் கொங்கு நாட்டையரசாண்டான். அதாவது, சோழன் செங்கணானுக்குக் கீழடங்கிக் கணைக்காலிரும்பொறை அரசாண்டான். ஆகவே, சோழன் செங்கணானும் சேரமான் கோக்கோதை மார்பனும் கணைக்கால் இரும்பொறையும் சமகாலத்தவர் என்று தெரிகின்றனர்.

கடைச்சங்க காலத்தின் இறுதியில் பாண்டிய நாட்டை யரசாண்டவன் நெடுஞ்செழியன், கோவலன் கண்ணகி காலத்திலிருந்த நெடுஞ்செழியன் அல்லன். அவனுக்குப் பிறகு இருந்த நெடுஞ்செழியன். இவனைத் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்று வரலாறு கூறுகிறது. இந்த நெடுஞ்செழியன், சேர நாட்டுக் கடற்கரையோரத்தில் பேரியாற்றின் புகுமுகத்தில் இருந்த முசிறிப் பட்டினத்தை முற்றுகை செய்து அங்கிருந்த ஒரு தெய்வத் திருமேனியை எடுத்துக்கொண்டு மதுரைக்குப் போனான். (அகநானூறு 57:14 16;11-14) இவனுடைய சமகாலத்திலிருந்த சேர அரசன் மேற்சொன்ன கோக்கோதை மார்பனே.

கோக்கோதை மார்பன், கணைக்கால் இரும்பொறை, சோழன் செங்கணான், தலையாலங்காலத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஆகிய இவர்கள் கடைச்சங்க காலத்தின் இறுதியில் சமகாலத்தில் இருந்த அரசர்கள். இவர்களுக்குப் பிறகு இவர்களுடைய மக்கள் அல்லது உறவினர் சேர கொங்கு, சோழ, பாண்டிய நாடுகளை அரசாண்டார்கள். இவர்களுடைய பெயர் தெரியவில்லை. இவர்கள் காலத்தில் அயல் நாட்டவர் வந்து இவர்களை வென்று தமிழகத்தைக் கைப்பற்றி யரசாண் டார்கள். தமிழகத்தைக் கைப்பற்றி யரசாண்ட வரலாறு மறைந்து போய் நெடுங்காலமாகப் பலகளப்பிரர் ஆட்சியில் தமிழகம் - மயிலை சீனி வேங்கடசாமி-8

நூற்றாண்டு வரையில் மறைந்து போயிருந்த களப்பிர அரசரைப் பற்றின வரலாற்றுச் செய்தி, பாண்டியருடைய செப்பேடுகள் கிடைத்த பிறகு அவைகளிலிருந்து தெரியவந்தன. திரு. கே.ஜி.சங்கரன் அவர்கள், வட்டெழுத்தில் எழுதப்பட்ட வேள்விக்குடிச் செப்பேட்டை இக்காலத் தமிழ் எழுத்தில் செந்தமிழ்த் திங்களிதழில் வெளியிட்டார் (செந்தமிழ், 20 ஆம் தொகுதி, பக்கம் 205-216). அதன் பிறகு, இந்திய சாசன இலாகா 1923-ஆம் ஆண்டில் எபிகிறாபியா இந்திகா என்னும் ஆங்கில வெளியீட்டில் வேள்விக்குடிச் சாசனத்தை ஆங்கில (இலத்தின்) எழுத்தில் வெளியிட்டது (Epigraphia Indica, Vol. XVII, 1923, pp. 291-309) சில ஆண்டுகளுக்குப் பிறகு தளவாய்புரச் சாசனம் கிடைத்ததும் இந்தச் செப்பேடுகளிலிருந்து களப்பிர அரசர்களைப் பற்றி அறிகிறோம் (பாண்டியர் செப்பேடுகள் பத்து, தமிழ் வரலாற்றுக் கழக வெளியீடு, 1967).

வேள்விக் குடிச் செப்பேடு வெளியான பிறகுதான் களப்பிரரைப் பற்றின செய்தி தெரியவந்தது. அதன் பிறகு களப்பிரரைப் பற்றிப் பல அறிஞர்கள் எழுதத் தொடங் கினார்கள். ஆனால், களப்பிரரைப் பற்றின முழு வரலாறு இன்றுங் கிடைக்கவில்லை.

களப்பிரர் வேறு, களம்பாளர் (களப்பாழர்) வேறு என்று சில வரலாற்று அறிஞர்கள் கருதினார்கள். சிலர் இருவரும் ஒருவரே என்று கருதினார்கள். திரு. கே. ஏ. நீலகண்ட சாஸ்திரியும் திரு. மு. இராகவையங்காரும், களப்பிரரும் களம்பாளரும் ஒருவரே என்று கருதினார்கள். திரு.டி.வி சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் இருவரும் வெவ்வேறு இனத்தவர் என்று கருதினார். பண்டாரத்தார் இதுபற்றி இவ்வாறு எழுதினார். "அன்றியும் தமிழ் நாட்டுக் குறுநில மன்னர் குடியினராகிய முத்தரையர் என்போர் களப்பிரரேயாவர் என்று சிலர் கூறுவது சிறிதும் ஏற்புடைத்தன்று. களப்பாள் என்ற சோணாட்டூரொன்றில், முற்காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அரசியல் தலைவன் ஒருவன் களப்பாளன் என்று சிறப்பித்து வழங்கப் பெற்றமையால், அவன் வழியினர் களப்பாளர் எனவும். களப்பாளராயர் எனவும் குடிப்பெயர் பெற்றுப் பெருமையோடு வாழ்ந்து வருவாராயினர். எனவே, தமிழராகிய
களப்பிரர் ஆட்சியில் தமிழகம் - மயிலை சீனி வேங்கடசாமி -3

களப்பாளரும் ஏதிலராகிய களப்பிரரும் ஒருவரே யாவரென்னும் முடிவு எவ்வாற்றானும் ஒத்துக்கொள்ளத் தக்கதன்று" (பாண்டியர் வரலாறு, டி.வி. சதாசிவ பண்டாரத்தார்; 'பாண்டி நாட்டில் களப்பிரர் ஆட்சி என்னும் தலைப்புக் காண்க')

தளவாய்புரச் செப்பேடு கிடைப்பதற்கு முன்பு திரு சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் இவ்வாறு எழுதினார். அந்தச் செப்பேடு கிடைத்த பிறகு களப்பிரரும் களப்பாளரும் அந்தரே என்பது தெரிந்துவிட்டது. வேள்விக்குடிச் செப்பேடு களப்பிரர் என்று கூறுவதைத் தளவாய்புரச் செப்பேடு களப்பாழர் (களப்பாளர்) என்று கூறுகிறது. “கடிராறு கவலைங்கல் களப்பாழர் குலங்களைந்தும் (வரி 99) களைப்பாழரைக் களைகட்ட மற்றிரண்டோன் மாக்கடுங்கோன் மானம் பேர்த்தருளிய கோன்" என்றும் தளவாய்புரச் செப்பேடு (வரி 131-132) கூறுகிறது. எனவே, களப்பிரரும் களப்பாளரும் ஒருவரே என்பது தெளிவாகத் தெரிகிறது. இனிக் களப்பிரரைப் பற்றித் தொடர்ந்து ஆராய்வோம்.

களப்பிரர் யார்?

களப்ரர், களப்பரர், களப்பிரர், களப்பாளர், களப்பாழர் என்றெல்லாம் கூறப்படுகிற இவர்களைக் களப்பிரர் என்று கூறுவோம். களப்பிரர் தமிழர் அல்லர். ஆனால், அவர்கள் ஆரியரோ என்றால் ஆரியரும் அல்லர். அவர்கள் வட இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தனர் என்று திரு. சதாசிவ பண்டாரத்தார் கருதுகிறார். "அன்னோர் (களப்பிரர்) பிராகிருதம், பாலி ஆகியவற்றைத் தமக்குரிய மொழிகளாகக் கொண்டு ஆதரித்துள்ளமையால் அம்மரபினர் தமிழர் அல்லர் என்பதும் வடபுலத்தினின்றும் போந்த ஏதிலர் ஆவர் என்பதும் நன்கு தெரியப்படும்" என்று அவர் எழுதுகிறார் (பாண்டியர் வரலாறு, 1969, பக். 32). களப்பிரர் சைன மதத்தையும் பௌத்த மதத்தையும் ஆதரித்தனர். இந்த மதங்களின் 'தெய்வ பாஷை' பிராகிருதம் (சூரசேனியும் பாலி மொழியும்) ஆகையால், இயற்கையாகவே இந்தப் பிராகிருத மொழிகளுக்கு ஆக்கம் ஏற்பட்டது. ஆனால், களப்பிரர் ஆட்சியில் தமிழகம் மயிலை சீனி வேங்கடசாமி -10

அவர்களுடைய தாய்மொழி பிராகிருதம் அன்று, கன்னட வடுகர். எனவே, அவர்கள் திராவிட இனத்தவரே.

களப்பிரரைப் பற்றி ஆராய்ந்த அறிஞர்கள் அவர்களைப் பற்றித் தங்கள் தங்கள் கருத்துகளை எழுதியுள்ளனர். பழந் தமிழகத்தின் வடக்கில் இருந்த வேங்கட நாட்டை அரசாண்ட சிற்றரசர் புல்லி என்று கூறப்படுகின்றனர். 'கள்வர் கோமான் புல்லி' என்று அவர்கள் கூறப்படுகிறார்கள். (அகநானூறு எ: 11-13) கள்வர் என்பதைக் களவர் என்றும் படிக்கலாம். பழைய ஏட்டுச் சுவடிகளில் புள்ளியிட வேண்டிய எழுத்துக்களுக்குப் புள்ளி இடாமலே எழுதும் வழக்கம் இருந்தது. ஆகவே, இந்தச் சொல் களவர் என்பதா கள்வர் என்பதா என்பதை அறுதி யிட்டுக் கூறமுடியவில்லை. இந்தச் சொல்லைக் களவர் என்று கொண்டு திரு. மு. இராகவையங்கார் களவர் என்பது களப்பிரரைக் குறிக்கிறது என்று எழுதினார் (Journal of Indian His- tory, Vol. VIII) டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி அய்யங்காரும் இதே கருத்தைக் கூறியுள்ளார். வேங்கட நாட்டையாண்ட களவர் அல்லது கள்வர்தாம் (புல்லி அரசர்) களப்பிரர் என்று இவர் . (The Age of Imperial Unity, Vol. II, Bharatiya Vidya Bhavan, 1951, pp. 223-33) இந்த அறிஞர்கள் கூறுவது ஏற்கத் தக்கது அன்று, வேங்கட நாட்டிலிருந்த களவர் அல்லது கள்வர் என்பவர் தமிழர். களப்பிரரோ தமிழர் அல்லாத கன்னடர், மற்றும் சங்க காலத்து வேங்கட நாடு தொண்டை மண்டலத்தைச் சேர்ந்து தமிழகத்தின் பகுதியாக இருந்தது. ஆகவே, தமிழராகிய கள்வர் (களவர்) வேறு. கன்னடராகிய களப்பிரராக இவர்கள் இருக்க முடியாது. கள்வர் (களவர்) வேறு, களப்பிரர் வேறு.

பல்லவ அரசர் ஆண்ட தொண்டை மண்டலம் தவிர, சோழ, பாண்டிய, சேர நாடுகளைக் கைப்பற்றி யரசாண்ட களப்பிரர் கருநாட நாட்டுக் கன்னடர் என்பதில் ஐயமில்லை. பாண்டி நாட்டில் இருந்த மூர்த்திநாயனார் காலத்தில் பாண்டி நாட்டையரசாண்ட மன்னன் கன்னட நாட்டு அரசன் என்று சேக்கிழார் கூறுகிறார். "கானக்கடி சூழ் வடுகக் கருநாடர் மன்னர்" என்று அவர் கூறுகிறார் (திருத்தொண்டர் புராணம், மூர்த்திநாயனார் புராணம் 11,24). 'வடுகக் கருநாடர் மன்னன்' களப்பிரர் ஆட்சியில் தமிழகம் - மயிலை சீனி. வேங்கடசாமி - 11

என்பதன் பொருள் வடுக நாடாகிய கன்னட நாட்டைச் சேர்ந்த அரசன் என்பது. பிற்காலத்து நூலாகிய கல்லாடம் 'மதுரை வவ்விய சுருநடர் வேந்தன்' என்று கூறுகிறது. (கல்லாடம் செய்யுள் 56) கன்னட நாட்டை அக்காலத்தில் ஒரே அரசன் ஆட்சி செய்யவில்லை. வெவ்வேறு பகுதிகளை வெவ்வேறு அரசர் ஆண்டனர் கருநாடர் மன்னர், கன்னட நாட்டில் எந்த ஊரை யரசாண்டவன் என்பதைப் பெரிய புராணமும் சுல்லாடமும் கூறவில்லை. அவர்கள் கன்னட தேசத்தில் களபப்பு என்னும் நாட்டையாண்ட சிற்றரசர் என்பது கன்னட நாட்டுக் கல்வெட்டு களிலிருந்தும் கன்னட நூலிலிருந்தும் தெரிகிறது. சந்திரகுப்த மௌரியன் (அசோகச் சக்கரவர்த்தியின் பாட்டன்) அரசாட்சியைத் துறந்து சைன சமயத்தைச் சார்ந்து பத்திரபாகு முனிவருடனும் அவரைச் சார்ந்த சமண சமயத் துறவி களுடனும் தென்னாட்டுக்கு வந்து களபப்பு நாட்டில் உள்ள களபப்பு மலையில் தங்கினார்கள் என்று சமண சமய நூலாகிய வட்டாராதனெ என்னும் நூல் கூறுகிறது. அவர்கள் கழ்ப்பு நாட்டுக்கு வந்தார்கள் என்று இந்நூல் கூறுகிறது (வட்டாராதனெ, பத்ராஹூபட்டாரா கதெ.) கழ்பப்பு என்பதும் கள்பப்பு என்பதும் ஒன்றே கழ்பப்பு (களபப்பு) என்பதைச் சமஸ்கிருதத்தில் கடவப்ர என்று கூறினார்கள். இப்போதைய சிரவண பெளகொள என்னும் பிரதேசமே பழங்காலத்தில் கள்பப்பு நாடு என்று பெயர் பெற்றிருந்தது (கன்னட ஸாஸனகள ஸாம்ஸ்கிருதிக அத்யயன, கி.பி.450-1150, டாக்டர் எம். சிதானந்த மூர்த்தி, 1966, பக்கம் 70,78) களபப்பு நாட்டில் உள்ள சத்திரகிரி மலையின் பழைய பெயர் களபப்பு பெட்ட (பெட்ட - மலை) என்று கூறப்பட்டது (கர்நாடக இதிஹாஸ தர்ஸன (கன்னட தேசத்தின் வரலாறு), டாக்டர் எம்.வி.கிருஷ்ணராவ், எம். கேசவபட்ட, 1970, பக் 13,14)

ஹொஸகோட்ட தாலுகாவில் கிடைத்துள்ள பழைய வீரக்கல் சாசனம் கன்னட மொழியில் பழைய கன்னட எழுத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இதில் களப்பிர இராச்சியம் கூறப் படுகிறது. இதன் வாசகம் இது: ஸ்வஸ்திஸ்ரீ மதுராளக் களவர திருராஜ்யதல்மள்ளே கவுண்டரும் சாவா காவுண்டரு துயீநாத பல்கனிளலுதுவ காமூண்ட ஸத்த எர்ரதயக்களப்பிரர் ஆட்சியில் தமிழகம் - மயிலை சீனி. வேங்கடசாமி -12

कांना क्रम (Epi.car., Vol. IX Hoskote, 13 p. 198) 2, களபப்பு நாடு களவர இராச்சியம் என்பது மைசூர் தேசத்தில் இப்போது சிரவண பெளகொள என்று கூறப்படுகிற வட்டாரத்தைச் சேர்ந்திருந்தது என்பது தெரிகிறது. களவர் நாடு,களப்பிரர் நாடு என்னும் பெயர்கள் வேறு गाली . (Epi. Car., Vol. X, Chintamani, 9) திருத்தொண்டர் புராணம் கூறுகிற 'வடுகக் கருநாடர் மன்னன் இந்தக் களபப்பு நாட்டைச் சேர்ந்தவன் என்று கருதலாம்.'

கருநாட தேசத்தில் இருந்த களப்பிரரின் களபப்பு இராச்சியம் மைசூர் நாட்டைச் சேர்ந்த கோலார் (கோலால புரம்) வரையிலும் பரவியிருந்தது. இதனைப் பழைய தமிழ்ச் செய்யுட்கள், தமிழகத்தையாண்ட களப்பிரரை நந்தி என்றும் நந்திமலையை யுடையவர் என்றும் கூறுகின்றன. "நந்தி மால்வரைச் சிலம்பு நந்தி," புகழ்துறை நிறைந்த பொருவேல் நந்தி"

கன்னட நாட்டுக் களபப்பு இராச்சியத்தை யாண்ட களப்பிரர் எப்பொழுதும் சுதந்தரராக இருக்கவில்லை. அவர்கள் கடம்பர், கங்கர் போன்ற வேறு அரசர்களுக்கு வெவ்வேறு காலத்தில் அடங்கியிருந்தனர் என்பது தெரிகிறது. கடம்ப அரசனான சாகுஸ்தன் (கி.பி. 425-450) களபோரருக்குப் (களப்பிரர்) பகைவன் என்று பேலூர் தாலுகாவில் ஹல்மிடி என்னும் ஊரிலுள்ள கல்வெட்டு எழுத்துக் கூறுகிறது. (Mysore Archaeological Report, 1936, No. 16) களபப்பு நாட்டின் அரசனான திண்டிகன் என்பவன், மேலைக் கங்க அரசனான ஸ்ரீபுருஷனுடைய அனுமதி பெற்று ஒரு தானத்தைக் கொடுத் (Mysore Arch. Re. 1927, No.118). இதிலிருந்து களபப்பு அரசர் சில காலம் கங்க அரசருக்குக் கீழடங்கியிருந்தனர் என்பது தெரிகிறது.

மேற்கூரிய சான்றுகளினாலே கன்னட நாட்டவராகிய களப்பிர அரசர் அங்கு ஒரு பகுதியான களப்பிர நாட்டை யரசாண்டனர் என்பது தெரிகிறது. அவர்கள் ஏறத்தாழ கி.பி.களப்பிரர் ஆட்சியில் தமிழகம் - மயிலை சீனி. வேங்கடசாமி - 13

250-இல் அல்லது அதற்குச் சற்றுப் பின்னர்த் தமிழகத்தைக் கைப்பற்றிச் சேர, சோழ, பாண்டிய நாட்டை யரசாண்டனர் என்று கருதலாம்.

Friday, 20 August 2021

Pay continuation Order | Department Exam Study Materials

⚜️⚜️ *FLASH NEWS* ⚜️⚜️

⚫👉 _*இரண்டாம் கட்ட Hi-Tech Lab ICT பயிற்சி 76804 முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 23.08.2021 முதல் 27.08.2021 வரை நடைபெறும் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!!!.*_

👆👉https://kalviamuthu.blogspot.com/2021/08/hi-tech-lab-ict-76804-23082021-27082021.html?m=1

⚫👉_*2017-18ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 900 முதுகலை ஆசிரியர்களுக்கு 3 மாதத்திற்கான ஊதிய நீட்டிப்பு ஆணை வெளியீடு!!!*_

👆👉https://kalviamuthu.blogspot.com/2021/08/school-education-2017-2018-upgrade.html?m=1

⚫👉 _*2017-18ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட 150 உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 750 பட்டதாரி ஆசிரியர்களுக்கு 3 மாதத்திற்கான ஊதிய நீட்டிப்பு ஆணை வெளியீடு!!!*

👆👉https://kalviamuthu.blogspot.com/2021/08/school-education-750temporarypostssanct.html?m=1

⚫👉  *124- ACCOUNT TEST FOR SUBORDINATE OFFICER PART-I PENSTION PROBLEMS - 72 PAGES PDF MATERIAL*

👆👉https://kalviamuthu.blogspot.com/2021/08/124-account-test-for-subordinate.html?m=1

⚫👉 *9th - 12th Refresher Course Module 2021 - 2022 ~ Received from TNSCERT*

👆👉https://kalviamuthu.blogspot.com/2021/08/9th-12th-refresher-course-module-2021.html?m=1