என்றும்நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே!
- (ஏரிமுனை)
.
பூமியிலே மாரியெல்லாம் சூரியனாலே -பயிர்
பூப்பதுவும் காய்ப்பதும் மாறி யினாலெ - நாம்
சேமமுற நாள்முழுதும் உழைப்ப னாலே -இந்தத்
தேசமெல்லாம் செழித்திடுது நம்ம கையாலே !
-(ஏர்முனை)
.
நெத்தி வேர்வை சிந்தினோமேமுத்துமுத்தாக -அது
நெல்மணியாய் விளைஞ்சிருக்கே கொத்துக்கொத்தாக
பக்குவமாய் அறுத்துஅதைக் கட்டுக்கட்டாக -அடிச்சிப்
பதருநீக்கிக் குவிச்சு வைப்போம் முட்டுமுட்டாக!
-(ஏர்முனை)
.
வளர்ந்துவிட்ட பருவப்பெண் போல்உனக்குவெட்கமா. தலை
வளைஞ்சு சும்மா பாக்கிறியே தரையின் பக்கமா -இது
வளர்த்துவிட்ட தாய்க்குத் தரும்ஆசை முத்தமா? -என்
மனைக்கு வரக்காத் திருக்கும் நீஎன் சொத்தம்மா.!
- (ஏர்முனை)
_ திரைக்கவி திலகம் மருதகாசி
No comments:
Post a Comment