Sunday, 5 May 2013

தற்கால அரசியல்

நாட்டில் நடக்கும் விஷயங்களை பார்க்கும்போது யாரைப்பார்த்து சிரிப்பது என்றே தெரியவில்லை.
    முல்லைப்பெரியாறு பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை திருப்திப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கை என்ன தெரியுமா?
    முல்லைப்பெரியாறு  அணையைக்கட்டிய  பென்னி குவிக்குக்கு மணிமண்டபம்  கட்டியது தான்.
   முல்லைப்பெரியாறு  பிரச்சனை ஓவர்!
      அடுத்தது  காவிரி நீர் பிரச்சனை!
     கரிகாலனுக்கு மணிமண்டபம்  கட்ட அரசு அதிரடி உத்தரவு!
     இப்படியே போனால்....
கச்சத்தீவு பிரச்சனை:
  மீனவ சமுதாயத்தில் பிறந்த யாருக்காவது ம.ம! (அதாங்க .. மணிமண்டபம்)
    கூடங்குளம் பிரச்சனை..
உதயகுமாருக்கு ம.ம?
-ஓ! சாரி வாழ்ந்து கொண்டு இருப்பவர்களுக்கு ம.ம கிடையாது என்பது  எழுதப்படாத விதி இல்ல?-
    எனக்கு என்ன டவுட்டுன்னா இந்த ம.ம வுக்கெல்லாம் எந்த அளவு எலெக்ஷன்  வேல்யூ இருகககும் அப்படிங்கறதுதான்.
       தமிழகத்தில் மாறி மாறி அரசுகள் வந்துகொண்டிருந்தாலும் மாறாத நடவடிக்கை  இதுமாதிரி ம.ம அமைப்பதுதான்!
    இதேநிலை தொடர்ந்தால் இன்னும் நூறு வருஷத்தில்
  தெருவுக்குத்தெரு  இருக்குற பிள்ளையார் கோயில் எண்ணிக்கை ய விட அதிகமா ம.ம இருக்கப்போவது நிச்சயம்!

No comments:

Post a Comment