ஒவ்வொரு வருஷமும் இதே கத தான் அரங்கேறுது.தேர்வு முடிவு வரும்போது தன் வாழ்வு முடிவை தேடும் மாணவ மாணவிகள்.
இத்தனை ஆண்டுகளாக இது ஒரு தொடர்கதையாகத்தான் இருக்கிறது. ஆனால் இதை தடுத்து நிறுத்த வேண்டியவர்களோ எதுவும் செய்யாமல் இருக்கிறார்கள்.
இவ்வாண்டு ஆயிரத்துக்கு மேல் மதிப்பெண் பெற்ற ஒரு +2 மாணவி தான் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை என்று கூறி தன்னையே மாய்த்திருக்கிறாள்.
இதற்கு முடுவே இல்லையா? என்று சிந்தித்துப்பார்த்தால் மிச்சம் தீர்வு இல்லாமல் இல்லை.
தேர்வு முடுவுகளை வெளிப்படையாக இணைய தளத்தில் வெளியிடாமல் அந்தந்த பள்ளிகளில் பெற்றோரையும் வரவழைத்து மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களை தனியாக ஒன்றிணைத்து ஆசிரியர்களைக்கொண்டு மனவியல் ரீதியாக அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.
பள்ளியில் படிக்கும் காலத்திலேயே மாணவர்களில் மனதளவில் பலவீனமானவர்களை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.
தேர்வில் தோல்வி என்பதே இல்லை என்ற நிலையை உருவாக்கி விட்டால் மேலே கண்ட செயல்பாடுகளுக்கு வேலையே இல்லை.
பத்தாம் வகுப்பில் ஆங்கிலப்பாடத்தில் ஒரு மாணவன் கறைந்த மதிப்பெண் எடுத்துள்ளான் என வைத்துக்கொள்வோம். அவனுக்கு ஆங்கிலமே இல்லாத பாடப்பிரிவை +2 வில் வழங்கவேண்டும்.
அதே போலவே கணக்குப்பாடமாகவோ அல்லது அறிவியல் பாடமாகவோ இருந்தாலும் எந்த பாடத்தில் மதிப்பெண் குறைகிறதோ அந்த பாடம் இல்லாத பாடப்பிரிவை அந்த மாணவனுக்கு வழங்க வேண்டும்.
படிப்பே இல்லாத முழுக்க முழுக்க செய்முறைகள மட்டுமே கொண்ட பாடப்பிரிவுகளைக்கூட +2வில் உருவாக்க வேண்டும்.
படித்தவன் மட்டுமே உலகில் வெற்றி பெறமுடியும் என்ற தவறான வாதத்தை ஆசிரியர்கள் சொல்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
எல்லாருக்கும் இவ்வுலகில் இடம் உள்ளது என்பதை மாணவர்களுக்கு புரிய வைத்துவிட்டால் இது போன்ற
தற்கொலைச்செய்திகள் நம் காதுகளை எட்டாது.
No comments:
Post a Comment