Tuesday, 14 May 2013

வன்முறைக்குக் கிடைக்கும் மரியாதை!

       தடி எடுத்தவன் தண்டல் காரன் என்று ஒரு பழமொழி உண்டு.  வன்முறை க்கு காலம் காலமாக சமுதாயத்தில் மரியாதை வழங்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

         தற்போது மீண்டும்   ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது...வன்முறையே சரியான வழிமுறை என்பது!!

       பா.ம.க நிறுவனர் மரு.ராமதாஸ் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்...

     இது பா.ம.க. வின் வன்முறை க்குக் கிடைத்த வெற்றி!

      மரு.ராமதாஸ் கைது செய்யப்பட்ட போதும்  அடுத்தடுத்து அவர் மீது வழக்குகள் பாய்ந்தபோதும்  எதிர்பார்க்கப்பட்ட நிலை என்னவென்றால்  மீண்டும் ஒரு வைகோ 19 மாதம் சிறை வைக்கப்பட்டது போன்ற  ஒரு நிலை ஏற்படப்போகிறது  என்பதே..

     ஆனால் அதெல்லாம் நடக்கவில்லை.

     வை.கோ கூறியிருந்கார்- தான் கைது செய்யப்பட்ட போது  தனது கைதுக்காக தனது தொண்டர்கள் யாரும் வன்முறையில் இறங்கக்கூடாது  என்று கூறினார்.

    வன்முறை எதுவும் நடைபெற வில்லை. 19 மாதம் சிறைவாசத்தை அனுபவித்தார் வைகோ!  இதுதான் அகிம்சைக்கு கிடைத்த பரிசு!

     பத்திரிக்கைகளில்  எழுதினார்கள். வைகோ கைதுக்குப்பிறகு  எந்த வன்முறையும் நடக்கவில்லை என்றவுடன்  பத்திரிக்கைகளில் எழதினார்கள்...ஹீரோ வாக இருந்தவர் ஜீரோவாகிவிட்டார்  என்று!!

     இந்தப்பெயர்தான் அகிம்சைகககு பத்திரிக்கைகள் மத்தியில் கிடைக்கும் மரியாதை! !

    ஒரு வாரத்துக்கு முன்பே முறையாக அனுமதி வாங்கி அமைதியான முறையில் பேருந்துகளை மறித்தும் கடைகளை அடைக்கச் சொல்லி வேண்டுகோள் விடுத்தும்  அதை மீறி எல்லாம் நடக்கும் போது பத்திரிக்கைகளில் அடுத்த நாள் எழுதுவார்கள்...

   " போராட்டம் பிசுபிசுத்தது"

   அன்னா ஹசாரே  காமெடியனாக்கப்பட்டு விட்டார்!
   
    இன்றைய பத்திரிக்கைகாரர்  காந்தி காலத்தில் இருந்திருந்தால்  காந்தியையே காமெடியனாக்கி இருப்பார்கள்....

   அகிம்சாவாதிகளும் அகிம்சையும்  இன்று நகைச்சுவை ஆக்கப்பட்டு விட்டது.

    
      ராமதாஸையும் 19 மாதம் சிறை வைக்க முடியவில்லை...

      ஏன்?

  வடக்கே  ஒரு வாரமாக  பஸ்,லாரி ஓடவில்லை ..

   ஏன்?

  போராட்டம் பிசுபிசுத்துவிடக்கூடாதே!
      
  ஹீரோ  ஜீரோ   வாகி விடக் கூடாதே அதற்காகத்தான.்

       தெரிந்தோ தெரியமலோ எல்லாருமே வன்முறையை  ஆதரிப்பவர்களாகவே உள்ளனர்.

    பாராளுமன்றத்தில்  குண்டு வீசிய பகத்சிங்  மாவீரன்      என்று  பாடநூல்களே  கொண்டாடுகின்றன. 

   பகத்சிங்கின்  செயலை  காந்திஜி கண்டித்தார்.

   அந்த தெளிவு இன்னும் நமக்கு வரவில்லை.

    யார்  எதற்கு வேண்டுமானாலும் போராடிவிட்டுப்போகட்டும்
 

    அவர்களின் போராட்டத்தில் அகிம்சை இருக்கிறதா என்று மட்டும் தான் பார்க்க வேண்டும்.

   நியாயம் இருக்கிறதா  என்று பார்ப்பது இரண்டாம் பட்சமாகவே இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment