Thursday, 9 May 2013
மின் தட்டுப்பாட்டைப் போக்கும் வழிகள்
தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவு மின்தடை நிலவி வருவது அனைவரும் அறிந்ததே.
இன்றைய மின்தடைப்பிரச்சனைக்கு இதற்கு முன்பு ஆட்சி புரிந்த தி.மு.க தான் என்று இன்றைய ஆட்சியாளர்களும், சரி ..தி.மு.க வினரிடம் கேட்டால் அதற்கு முன்பு ஆட்சி செய்த அ.தி.மு.க வே காரணம் என்றும் பதிலாக வருகிறது.
தி.மு.க வின் கருத்தும் இங்கு முக்கியமல்ல,அ.தி.மு.க வின் கருத்தும் இங்கு முக்கியமல்ல! இங்கு நான் சொல்வதுதான் முக்கியம்! ஏனென்றால் இது எனது வலைதளம்!
நான் சொல்கிறேன்..
இன்றைய மின்தடைப்பிரச்சனைக்கு மூலகரணமே தமிழக மக்கள் தான்!
2002 ஆம் ஆண்டு ஜெயலலிதா மின் வாரியத்தை லாபகரமான துறையாக மாற்றினார்.இலவச மின்சாரத்தை ரத்து செய்தார்.நியாயமான கட்டணத்தை நிர்ணயம் செய்தார.்
ஆனால் அவருக்கு தமிழ்நாட்டில் வாழும் கைய்ந்தியே பழக்கப்படுத்தப்பட்ட மக்கள் கொடுத்த பரிசு நாடாளுமன்றத்தேர்தலில் படுதோல்வி...!
39 தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்த ஒரு அரசியல்வாதி அதற்குப்பின் இதுபோல் ஒரு நிர்வாக சீர்திருத்தத்தை கனவிலும் நினைத்துக்கூடப்
ப ார்க்க மாட்டான்.
மின்துறை மீண்டும் நஷ்ட்டத்தில் நடைபோட ஆரம்பித்தது. அதற்குப்பின் கூடுதல் மின்னுற்பதததி பற்றி அரசும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.
அதேபோல் கலைஞர் முதல்வராக இருந்த போது விவசாயத்துக்கும் மின்கட்டண ம் இருந்தது. அதை சிறிதளவு உயர்த்தினால். அவ்வளவு தான்!
விவசாயிகள் எல்லோரும் போராட ஆரம்பித்தார்கள்.
பார்த்தார் கலைஞர் ...
விவசாயத்துக்கு மின்கட்டண த்தை அடியோடு ரத்து செய்தார்!
இப்படி மின்வாரியம் நலிவடைய மக்களே காரணமாக இருந்தார்கள்.
இன்று மின்வாரியம் அதல பாதாளத்துக்கு சென்று விட்டது
இதை, மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டுவரவேண்டியது மக்களிடமும் துணிந்த முடிவெடுக்கும் அரசியல் தலைமையிடம் உள்ளது.
25 யூனிட் வரை மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கு இலவச மிள்சாரத்தை அளிக்க வேண்டும்.
100 யூனிட் வரை மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கு யூனிட்டுக்கு ரு.4 வசூலிக்க வேண்டும்
200 யூனிட் பயன்படுத்துவோருக்கு எந்த சலுகையும் இன்றி மின்சாரம் வழங்க வேண்டும்.
500 யூனிட்டுக்கு மேல் மின்கட்டணத்தில் பத்து சதம் லாபம் வைத்து வழங்க வேண்டும்.
தனியார் மின்னுற்பத்தியாளர்களுக்கு குறித்த நேரத்தில் பணப்பட்டுவாடா செய்ய வேண்டும். இதன்மூலம் மேலும் பல தனியார் தமிழகத்தில் மின்னுூர்பத்தி செய்ய முன்வருவார்கள்.
தனியார் மின்னுற்பத்தி செய்ய எந்த நிபந்தனைகளும் விதிக்கக் <அல்லது மிகக்குறைந்த நிபந்தனைகள் விதிக்க வேண்டும்> கூடாது.
விவசாயத்துக்கு நியாயமான மின்கட்டணத்தை வசூலிக்க வேண்டும்.
இதனால் எதிர்கட்சிகள் அரசியல் சுயலாபத்துக்காக போராட்டங்களில் இறங்கக்கூடும். ஆனால் அரசு ஆட்சி போனாலும் போகட்டும் என்று நாட்டு நலன் கருதி உறுதியாக இருக்க வேண்டும்.
இவற்றை நடைமுறைப்படுத்தினால் மின்வெட்டே இல்லாத மாநிலமாக தமிழ்நாடு திகழும்.
ஆனால் .....
இதெல்லாம் நடகககாது என்று எனக்கு நன்றாகவே தெரியும்!
்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment