Friday, 28 November 2014

தமிழக ஆசிரியர் கூட்டணி வலங்கைமான் வட்டாரக்கிளையின் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தமிழக ஆசிரியர் கூட்டணி வலங்கைமான் வட்டாரக்கிளையின் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:                (நாள்: 19.11.2014)

1.தென்கரை ஆலத்தூர் மற்றும் மாணிக்கமங்கலம் ஆகிய பள்ளிகளுக்கு உரிய மாணவர் எண்ணிக்கை இருந்தும் அதற்கேற்ற ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்காத நிலை வருந்தத்தக்கது. உதவித்தொடக்க கல்வி அலுவலர்கள் இந்த ஆண்டு மேற்கண்ட பள்ளிகளுக்கு முறையே ஒரு பட்டதாரி ஆசிரியர் பணியிடமும் ஒரு இடைநிலையாசிரியர் பணியிடமும் பெற நடவடிக்கை எடுக்கவும் அதுவரை மாற்றுப்பணியில் ஆசிரியர்களை பணியமர்த்தவும் செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
2.ஆசிரியர்களின் விண்ணப்பங்களின்மீது உடனடி கவனம் செலுத்தி உரிய ஆணைகளைகளை உடனுக்குடன் வழங்க வேண்டும் என உதவித்தொடக்க கல்வி அலுவலர்களை செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
3.பல மாவட்டங்களில் பங்கேற்பு ஒய்வூதியத்திட்டத்தில் சேர்ந்துள்ள ஆசிரியர்களுக்கு கணக்கு நறுக்கு வழங்கப்பட்டு விட்டது. வலங்கைமான் வட்டார ஆசிரியர்களுக்கு உடனடியாக பெற்று வழங்க ஆவன செய்திட செயற்குழு வலியுறுத்துகிறது.
4.வலங்கைமான் உதவித்தொடக்கக்கல்வி அலுவலகத்தில் பதவி உயர்வு ஊதிய நிர்ணய ஆணைகள், ஊக்க ஊதிய உயர்வு ஆணைகள், உயர்கல்வி முன் அனுமதி ஆணைகள், என அனைத்துவித ஆணைகளுக்கும் குறிப்பிட்ட தொகை நிர்ணயம் செய்து  வாங்கப்படுகிறது. இத்தகைய செயல்பாடுகளை உடனே நிறுத்த வேண்டும் என செயற்குழு வலியுறுத்துகிறது. மீண்டும் இதே நிலை நீடித்தால் ஆசிரியர்களை திரட்டி போராடுவது என இச்செயற்குழு தீர்மானிக்கிறது.
5.ஆசிரியர்கள் தங்கள் முதிர்ச்சி அடைந்த தொடர்சேமிப்பு கணக்குப்புத்தகத்தைப்பெற 100 ரூபாய் தந்தால்தான் அலுவலகத்திலிருந்து பெற முடியும் என்ற நிலை உள்ளதால் ஆசிரியர்களின் தொடர்சேமிப்பு கணக்குப்புத்தகங்களை அலுவலகத்திலிருந்து திரும்பப் பெறுவது என தீர்மானிக்கப்படுகிறது.
6.வருங்கால வைப்பு நிதி முன்பணத்துக்கு விண்ணப்பித்து மாதக்கணக்கில் பல ஆசிரியர்கள் காத்திருக்கும்போது வேண்டியவர்களுக்கு மட்டும் ஆணை வழங்கி ஏனைய ஆசிரியர்களுக்கு ஆணை வழங்காதது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். சென்ற ஆண்டு இதே போன்ற நிகழ்வு நடந்து மாவட்டத்தொடக்க கல்வி அலுவலர் முன்னிலையில் உதவித்தொடக்க கல்வி அலுவலர்கள் இது போல் இனி நடைபெறாது என எழுதி கையொப்பமிட்டுக்கொடுத்ததற்கு நேர்மாறாக நடந்து கொள்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
7.வருங்கால வைப்பு நிதி தணிக்கை செலவுக்காக ரூ.200 வீதம் ஏற்கனவே வசூல் செய்யப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் அதே காரணத்திற்காக ஆசிரியர்களிடத்தில் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள் பணம் வசூல் செய்வதை நிறுத்துமாறு இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
8.மேற்கண்ட பிரச்சனைகள் தொடர்பாக உதவித்தொடக்க கல்வி அலுவலர் மற்றும் கூடுதல் உதவித் தொடக்க கல்வி அலுவலர் ஆகியோரை சந்திப்பது எனவும் அவர்களின் விளக்கத்தைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசித்து முடிவெடுப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
                                        

No comments:

Post a Comment