Monday, 5 January 2015

பள்ளி மாணவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை நடத்தும் போட்டிகள்

     இந்து சமய அறநிலையத்துறை சார்பாக பள்ளி மாணவர்களுக்கு மார்கழி மாதத்தை முன்னிட்டு திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களில் இருந்து ஒப்புவித்தல் போட்டியும் கட்டுரை போட்டியும் நடத்த ஆணை இடப்பட்டு உள்ளது.
        1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் ஒரு பிரிவாகவும் 6- 8 வகுப்பு மாணவர்கள் ஒரு பிரிவாகவும்,  9-12 வகுப்பு பயிலும் மாணவர்கள் ஒரு பிரிவாகவும் போட்டி நடத்தவும்,  பங்கு பெரும் மாணவர்களில் இருந்து  முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் வழங்கிட உத்தரவிடப்பட்டு உள்ளது.
     போட்டிகள்:
1. திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி
2. திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டி
3.திருப்பாவை கட்டுரை
4. திருவெம்பாவை கட்டுரை போட்டி

No comments:

Post a Comment