Friday, 22 May 2015

773 மாநில 'ரேங்க்'கில் 23 பேர் மட்டுமே தமிழ் வழி படித்தவர்கள்!

பத்தாம்
வகுப்பு பொது
தேர்வில், மாநில ரேங்க்
எடுத்த, 773 மாணவ,
மாணவியரில், தமிழ்
வழியில் படித்த, 23 பேர்
முதல் மூன்று
இடங்களைப்
பெற்றுள்ளனர். இதில்,
ஐந்து பேர் அரசு
பள்ளிகளைச்
சேர்ந்தவர்கள்.
பத்தாம் வகுப்புத் தேர்வில்,
முதலிடத்தில், 41; இரண்டாம் இடத்தில்,
192; மூன்றாம் இடத்தில், 540 பேர்
வந்துள்ளனர். இதில், 23 பேர் தமிழ்
வழியில் படித்து, மாநில 'ரேங்க்'
வந்துள்ளனர்.
முதலிடம் மற்றும் இரண்டாம்
இடத்தில், தலா, ஒரு அரசுப்
பள்ளியும், மூன்றாம் இடத்தில்
மூன்று அரசுப் பள்ளிகளும் மாநில
இடத்தைப் பிடித்துள்ளன.
மொத்தமுள்ள, 773 பேரில், 23 பேர்
மட்டுமே தமிழ் வழி என்பது,
வெறும், 3 சதவீதம் தாய்மொழி வழிக்
கல்வியே சிறந்தது என, உலக
அளவில் நம்பப்பட்டு, சீனா உட்பட பல
வல்லரசு நாடுகளில் அமலிலும்
உள்ளது.
ஆனால், தமிழகத்தில், தமிழ்
வழிக்கல்வி என்பது
ஒட்டுமொத்தமாக சரிந்து, ஆங்கில
வழிக் கல்விதான் இனி ஆதிக்கம்
செலுத்தும் என்ற நிலை
ஏற்பட்டுள்ளது. இதனால், இனி அரசு
பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள்
அனைத்திலும், தமிழை கட்டாய
பாடமாக்கி விட்டு, அனைத்து
வகுப்பும் ஆங்கில வழிக்கு மாற்ற
வேண்டுமோ என்று,
கல்வித்துறையினர்
அச்சமடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment