பத்தாம் வகுப்பு தேர்வில், நல்ல
'ரிசல்ட்' கிடைத்துள்ளது. அறிவியல்
பாடத்தில், 10 மாணவர்களில், ஒருவர்,
நுாற்றுக்கு நுாறு மதிப்பெண்
எடுத்துள்ளது, ஆச்சரியமாக
உள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்,
400 மதிப்பெண் என்பது, சரித்திரமாக
இருந்தது; இப்போது, 499, 500
மதிப்பெண் எல்லாம் எடுக்கின்றனர்.
மாநிலத்தில், முதல் மூன்று
இடங்களை பிடித்தோர் எண்ணிக்கை,
700க்கு மேல் போகிறது;
அடுத்தடுத்த ஆண்டுகளில், 2,000 ஆக
உயரும்.இது, சரியான அறிகுறி
அல்ல. அகில இந்திய
நுழைவுத்தேர்வுகளில், நாம்,
29வது இடத்தில் இருக்கிறோம்;
இன்னும் பின்னடைவு ஏற்படும்.
புள்ளிவிவரங்கள் பார்க்கவும்,
கேட்கவும் நன்றாக உள்ளது.
உண்மையில், மாணவர்களின் திறன்
சார்ந்தாக இல்லை. மதிப்பெண்
குவிந்ததற்கு, வினாத்தாள் மிக
எளிமையாக தயாரிக்கப்பட்டதே
காரணம். வினாத்தாள், 40 சதவீதம்
எளிதாகவும்; 30 சதவீதம் சற்று
கடினமாகவும்; 30 சதவீதம்,
பாடத்திட்டம் சார்ந்து, அதே
நேரத்தில், புத்தகத்தில் இல்லாமல்,
மாணவர்கள் சிந்தித்து எழுதும்
வகையில், அமைய வேண்டும்.
அதுதான், மாணவர்களின்
உண்மையான திறனை
வெளிப்படுத்தும்; அதற்கேற்ப
வினாத்தாள் தயாரிப்பில் மாற்றம்
கொண்டு வருவது, காலத்தின்
கட்டாயம்.
Friday, 22 May 2015
கல்வியாளர் ஜெய்பிரகாஷ் காந்தி தேர்வு முடிவுகள் குறித்து கருத்து!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment