Wednesday, 20 May 2015

லடாய்!' ! டூ ஒப்பந்ததாரர், தலைமை ஆசிரியர் இடையே... டூ உயர்நிலைப் பள்ளி கட்டடம் பாதியில் நிறுத்தம்

தரம்
உயர்த்தப்பட்ட அரசு
உயர்நிலைப் பள்ளிக்கு,
58 லட்சம் ரூபாய்
மதிப்பீட்டில், பள்ளி கட்டடம்
கட்டுவதற்கு, டெண்டர்
விட்டு, இரண்டு
ஆண்டுகளுக்கு மேலாகியும்,
ஒப்பந்ததாரர், தலைமை ஆசிரியர்
இடையே ஏற்பட்ட பிரச்னையால்,
கட்டடப் பணிகள் பாதியில்
நிறுத்தப்பட்டு
உள்ளன.திருவாலங்காடு ஒன்றியம்,
நெமிலி கிராமத்தில், அரசினர்
நடுநிலைப் பள்ளி உள்ளது.
இப்பள்ளி, 2010ம் ஆண்டு, மார்ச் 15ம்
தேதி, அரசு உயர்நிலைப் பள்ளியாக,
தரம் உயர்த்தப்பட்டது.
வகுப்பறை கட்டடங்கள் உயர்நிலைப்
பள்ளிக்கு போதுமான வகுப்பறை
கட்டடங்கள் இல்லாததால், மத்திய அரசு
அனைவருக்கும் இடைநிலைக்
கல்வி திட்டத்தின் கீழ் (ஆர்.எம்.எஸ்.ஏ.,),
பள்ளி கட்டடம் கட்டுவதற்கு, 58 லட்சம்
ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.
ஒரு ஏக்கர் பரப்பளவில், நுாலகம்,
மாணவ, மாணவியர் கழிப்பறைகள்,
நான்கு வகுப்பறைகள், ஒரு ஆய்வகம்,
தலைமை ஆசிரியர் அறை, அலுவலக
அறை, விளையாட்டு பொருள்கள்
வைக்கும் அறை மற்றும் கணினி
அறை என, மொத்தம், 12 அறைகள்
கொண்ட பள்ளி கட்டடம் கட்ட முடிவு
செய்து, 2012ம் ஆண்டு, டிசம்பர் மாதம்
டெண்டர் விடப்பட்டது. அதை
தொடர்ந்து, கடந்த ஆண்டு, அக்.31ம்
தேதி, பள்ளி கட்டடம் கட்டுவதற்கு
அஸ்திவாரம் (வாணம்)
தோண்டப்பட்டது. அதன் பிறகு,
அடித்தளம் அமைக்கப்பட்டு பணிகள்
நிறுத்தப்பட்டன. ஒப்பந்ததாரர்,
தலைமை ஆசிரியர் இடையே ஏற்பட்ட
பிரச்னையால், பணிகள்
பாதிக்கப்பட்டுள்ளதாக,
கூறப்படுகிறது.
இதுகுறித்து, ஒப்பந்ததாரர்
குணாளன் கூறுகையில், 'பள்ளி
கட்டடம் கட்டுவதற்கு, ஆந்திராவில்
இருந்து தொழிலாளர்களை
அழைத்து வந்தேன். ஆனால்,
தலைமை ஆசிரியர் கட்டுமான
பொருட்கள் வாங்க,
தொழிலாளர்களுக்கு கூலி
கொடுக்கக்கூட பணம் தர
மறுக்கிறார். தொழிலாளர்களுக்கு,
குறித்த நேரத்தில் பணம்
கொடுக்காததால், அவர்கள் ஊருக்கு
திரும்பி சென்று விட்டனர்.
இதனால், பணிகள்
நிறுத்தப்பட்டுள்ளன' என்றார்.
பள்ளி தலைமை ஆசிரியர்
முனுசாமி கூறியதாவது: நான்,
கடந்த ஆண்டு, அக்.31ம் தேதிதான்,
நெமிலி அரசு உயர்நிலைப்
பள்ளியின் தலைமை ஆசிரியராக
பணியில் சேர்ந்தேன். எனக்கு
முன்னால் இருந்த தலைமை
ஆசிரியர், பள்ளி கட்டடப்
பணிகளுக்காக, ஒப்பந்ததாரரரிடம் 15
லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். அந்த
தொகைக்கான பணிகள் முழுவதும்
முடியவில்லை.
உத்தரவு இருப்பினும், எங்கள்
உயரதிகாரிகளிடம் உத்தரவு
பெற்று, ஒப்பந்ததாரருக்கு மீண்டும்
நான்கு லட்சம் ரூபாய் வழங்கினேன்.
இந்த தொகைக்கு உண்டான
வேலையை ஒப்பந்ததாரர்
செய்யவில்லை. மேலும், கட்டுமான
பொருட்கள் வாங்கியதற்கு சரியான
முறையில் பில் கொடுக்கவில்லை.
கட்டப்பணிகள் நடக்காத பட்சத்தில்,
கூடுதல் தொகை கொடுக்க
முடியாது என்றேன். இதனால்,
ஒப்பந்ததாரருக்கும், எனக்கும் சிறு
மனஸ்தாபம் ஏற்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, மாவட்ட முதன்மை
கல்வி அலுவலர் சந்திரசேகரன்
கூறுகையில், 'பள்ளி கட்டடம்
கட்டுவது குறித்து, இரு
தரப்பினரையும் அழைத்து பேச்சு
வார்த்தை நடத்தி, பணிகள்
விரைவில் தொடங்கப்படும்' என்றார்.

No comments:

Post a Comment