Thursday, 20 December 2018

கஜாபுயலும் - ஒரு நாள் ஊதியமும் ...


...........................................
இயக்க உறவுகளே வணக்கம் ..
அண்ணன் ஐெபட்டோ அவர்களின் வழிகாட்டுதலின்படியும் ஜேக்டோ-ஜியோவின் தீர்மானத்தின் படியும்'இது வெறும் ஊதியத்திற்காகப் போராடும் கூட்டமல்ல சமுதாயத்திற்காகவும் போராடும் 'என்பதைக் காட்டும் விதமாய் ஊருக்கெல்லாம் சோறு போட்ட டெல்டா பகுதி மக்கள் ஒரு கஜாபுயலால் உருக்குலைந்து போய் நிற்பதைக் கண்டு ஒரு நாள் ஊதியத்தை நமது ஊதியத்திலேயே பிடித்தம் செய்து மாண்புமிகு தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்குவதென அரசுக்கும் நீதிமன்றத்துக்கும் தெரிவிக்கப்பட்டது. கஜாபுயலைக் காரணம் காட்டி நமது போராட்டத்தை ஒடுக்கி விட நினைத்தவர்களுக்கு இது பேரிடியாய் விழுந்தது .அரசையும், நீதிமன்றத்தையும் மட்டுமல்ல மக்களையும் திரும்பிப் பார்க்க வைத்தது இந்த அறிவிப்பு. இதை முழுமையாக நிறைவேற்றும் வண்ணம் டிசம்பர் மாத ஊதியத்தில் ஒரு நாள் ஊதியத்தினை பிடித்தம் செய்து தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க கடமைப்பட்டுள்ளோம்.
           தமிழக ஆசிரியர் கூட்டணியின் இயக்க உறவுகளைப் பொறுத்தமட்டில் அண்ணன் ஐபெட்டோ அவர்களின் வழிகாட்டுதலையும், இயக்க தலைமையையும், இயக்க விதிகளையும் மதித்து நடப்பவர்கள் என்பதில் ஐயமில்லை. அதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நிரூபித்துக் காட்டுவோம்.
       புயல் வீசி நாள் பல கடந்தாலும் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் டெல்டா பகுதி மக்களும், அண்ணன் ஐெபெட்டோ அவர்களின் கஜாபுயல் அறிக்கைகளும், அந்த மக்களுக்காக தமிழக ஆசிரியர் கூட்டணியின் இயக்க உறவுகள் ஊரெல்லாம் ஓடி ஓடி நிவாரணப் பொருட்களை சேகரித்து அனுப்பியும், நேரில் சென்று ஆறுதல் கூறியும் நின்ற காட்சிகளும் இன்றும் மனதில் நீங்காமல் நிற்கிறது நினைவுகளாய்.... அதைப் போன்றே நமது ஒரு நாள் ஊதியமும் டெல்டா பகுதி மக்களின் துயர் துடைப்பதாய் அமையட்டும். தமிழக ஆசிரியர் கூட்டணிக்குப் பெருமையினை சேர்க்கட்டும்...
                என்றும்            இயக்கப் பணியில் 
                   பா.கனகராஜ்,
    மாநில துணைத்தலைவர்,
தமிழக ஆசிரியர்கூட்டணி .

No comments:

Post a Comment