செங்கழுநீர்ப்பட்டுச் சீர்மை
செங்கல்பட்டின் பழைய பெயர் கல்வெட்டில் தேடும்போது கண்ணில்பட்டது.அது,
செங்கழுநீர்ப்பட்டுச் சீர்மை(சீமை) என்று அச்சுததேவமகாராயர்(விஜயநகரம்) கல்வெட்டில் காணக்கிடைக்கிறது.!
காலம் 16 ஆம் நூற்றாண்டு.!
சகவருடம் 1455(பொ.யு.1533)
செங்கழுநீர்ப்பட்டுச் சீர்மையில் மாமன்னர் அச்சுததேவ தேவமகாராயர்,திருமலைதேவ மகாராயர் என்பவரை மகாமண்டலேஸ்வரராக நியமித்து தன் பிரதிநிதியாக ஆளப்பணித்திருந்தார் என்பதும் அவ்வூரில் வசூலித்த வரியின் மூலம் திருமலைதேவ மகாராயர் மன்னரின் நலனுக்காக அவ்வூர் கோயில் ஒன்றுக்கு நிவந்தம் அளித்திருந்தார் என்பதும் கூடுதல் தகவல்.!
No comments:
Post a Comment