Thursday, 27 November 2014

உபரி ஆசிரியர் பணியிடம் கணக்கெடுப்பு

தொடக்க கல்வி இயக்கத்தின் கீழ் உள்ள
உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்
பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும்
கல்வி உரிமை சட்டத்தில் உள்ள
ஆசிரியர், மாணவர்
விகிதாச்சாரத்தை பின்பற்றி
ஆசிரியர் நியமனம்
செய்யப்படுகிறது.
2014–15–ம் ஆண்டு ஆசிரியர்களின்
எண்ணிக்கையும் செப்டம்பர் 1–ம்
தேதி மாணவர்கள் வருகையின்
அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட
உள்ளது. அதற்காக
அரசு உதவி பெறும்
அனைத்து தொடக்க,
நடுநிலைப்பள்ளிகளில்
ஆய்வு மேற்கொண்டு ஆசிரியர் –
மாணவர்
விகிதாச்சாரப்படி உபரி ஆசிரியர்
விவரங்களை தயாரிக்குமாறு
மாவட்ட தொடக்க
கல்வி அதிகாரிகளுக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது.
தொடக்க
கல்வி இயக்குனருக்கு டிசம்பர் 10–ந்
தேதிக்குள் அனுப்ப வேண்டும் என
அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment