Thursday, 27 November 2014

மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மறுப்பு

இடிந்துவிழும்நிலையில்
உள்ள பள்ளி கட்டிடத்தை, இடித்
து அகற்றும் வரை,
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப
மாட்டோம் என்று, பெற்றோர்கள்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஈரோடு,
பெரியார் வீதியில் அரசு துவக்க
பள்ளி உள்ளது. இங்கு, 230 மாணவ,
மாணவியர் படிக்கின்றனர். இங்கு,
நூற்றாண்டு பழமையான
பள்ளி கட்டிடம்,
ஏற்கனவே இருமுறை இடிந்துள்ளது.
பயன்படுத்துவதற்கு லாயக்கற்றது என
பொதுப்பணித்துறையின்
கட்டிடப்பிரிவு,
ஏற்கனவே சான்று வழங்கியுள்ளது.
இதனால், இக்கட்டிடத்தில் உள்ள
வகுப்பறைகளை, அங்குள்ள
எஸ்.எஸ்.ஏ., கட்டிடத்துக்கு மாற்ற
வேண்டும் என்று,
பள்ளி மேலாண்மை குழுவினர், 24ம்
தேதி கலெக்டர் அலுவலகத்தில்
மனு கொடுத்தனர்.அன்றைய
தினமே, தீர்வு ஏற்படுத்தப்படும் என,
கலெக்டர் உறுதியளித்ததால்,
பெற்றோர்கள் கலைந்தனர். நான்கு,
ஐந்தாம் வகுப்பு மாணவர்கள்,
அருகில் உள்ள
வேறு பள்ளிக்கு மாற்றம்
செய்யப்படுவர் என
கல்வித்துறையினர்
தெரிவித்ததால், பெற்றோர்கள்
ஆத்திரம் அடைந்தனர்.இதனால்,
நேற்று காலை, மாணவ,
மாணவியருடன், பெற்றோரும்
சேர்ந்து, பள்ளி முன் குவிந்தனர்.
பள்ளி மேலாண்மை குழு தலைவர்
நாகேந்திரன் தலைமையில்,
100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில்
ஈடுபட்டனர்.அவர்களிடம், மாவட்ட
தொடக்க கல்வி அலுவலர்
மல்லிகா பேசியதாவது:
ஈரோடு, வளையக்கார
வீதி மாநகராட்சி பள்ளி வகுப்பறைகள்
, போதிய மாணவர்கள்
இன்றி வீணாகி வருகிறது.
அங்குள்ள ஆசிரியர்கள்
சும்மா இருக்கின்றனர். எனவே,
பெரியார் வீதி பள்ளியில் இருந்து,
50
மாணவர்களை அங்கு அனுப்பலாம்.
பொதுமக்களே ஸ்பான்சர்ஸ்
பெற்று இரு வகுப்பறையை கட்டி
இருக்கலாம். இங்குள்ள கட்டிடத்தின்
மேற்புர பகுதி காலியாக உள்ளது.
இரண்டு வகுப்பறை கட்டி கொடுக்க,
எம்.எல்.ஏ., ஒப்பு கொண்டுள்ளார்.
பள்ளி விடுமுறையின் போது,
கட்டிடம் கட்டப்படும்.இப்பள்ளியில்
உள்ள எஸ்.எஸ்.ஏ., ஆர்.எஸ்.ஏ.,
பொருட்களை உடனடியாக மாற்றி,
அக்கட்டிடத்தை, பள்ளி மாணவர்கள்
பயன்படுத்த அனுமதிக்க முடியாது.
இப்பிரச்னைக்கு காரணம்,
தலைமை ஆசிரியர்
(முத்துராமசாமி) தான்.
மாடி அறையில் நான்கு, ஐந்தாம்
வகுப்பு மாணவர்களை, அமர
செய்யலாம். ஏப்ரல் வரை வகுப்புகள்
மாடி அறையில் செயல்படும். சிலர்
தூண்டுதலில் தான், போராட்டம்
நடந்துள்ளது, என்றார்.பெற்றோர்கள்
கூறும் போது, தற்காலிக
தீர்வு தேவையில்லை. நிரந்தர
தீர்வு வேண்டும். ஒன்று முதல்
மூன்றாம் வகுப்பு வரை பயிலும்
மாணவ,
மாணவியருக்கு ஆபத்து உள்ளது.
பழைய கட்டிடத்தை உடனடியாக
இடிக்க வேண்டும்.
அதுவரை பள்ளிக்கு குழந்தைகளை
அனுப்ப மாட்டோம்,
என்றனர்.டி.எஸ்.பி., சம்பத்,
இன்ஸ்பெக்டர் ரவிக்குமார்
ஆகியோர்,
போராட்டத்தை தூண்டியதாக,
தலைமை ஆசிரியர்
முத்துராமசாமிக்கு,
எச்சரிக்கை விடுத்தனர். இதனால்
வாக்குவாதம் ஏற்பட்டது.பின்னர்
தாசில்தார்
அன்னபூரணி பேச்சுவார்த்தை
நடத்தி, பள்ளியின் பழைய கட்டிடம்,
ஓரிரு நாளில் இடித்து,
அகற்றப்படும், என உறுதியளித்தார்.
இø த தொடர்ந்து,
குழந்தைகளை பள்ளிக்கு
அனுப்புவதாக, பெற்றோர்கள்
ஒப்புக்கொண்டனர்.

No comments:

Post a Comment