அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ ஜியோ 2003 ஆம் ஆண்டு மாபெறும் போராட்டத்தை கையில் எடுத்து போராடி பல தியாகங்களை செய்து இறுதியில் வெற்றி கண்டது.
தற்போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரிய இயக்கங்களிடையே பல்வேறு பிரச்சனைகளை அரசிடம் முன்னெடுத்து செல்ல ஒத்துழைப்பு தேவை என்ற நிலை எழுந்துள்ளது.
2003 க்குப்பின் நியமிக்கப்பட்டுள்ள அரசு ஊழியர்கள் ,ஆசிரியர்களுக்கு பென்சன் மறுக்கப்பட்டு பங்கேற்பு ஓய்வூதியத்திட்டம் அறிவித்து இன்னமும் அத்திட்டம் அரைகுறையாகவே உள்ளது. இத்திட்டத்தை அறவே நீக்கி பழைய ஓய்வூதிய முறையே அனைவருக்கும் தொடர அரசை வலியுருத்த முதற்கட்டமாக அனைத்து அரசு ஊழியர் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டம் சென்னையில் உள்ள அரசு ஊழியர் சங்கக் கட்டடத்தில் ஜனவரி 8 ஆம் தேதி நடைபெற உள்ளது.
Tuesday, 30 December 2014
மீண்டும் உருவாகிறது ஜாக்டோ ஜியோ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment