Saturday, 13 December 2014

புதிய பள்ளிகள் தொடங்குவதில் கால தாமதம்

      அரசு புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்குவதும் நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலை பள்ளிகளாக  தரம்  உயர்த்துவதும்  பாராட்டுக்குறிய விஷயம். ஆனால் ஆனால் அவற்றுக்கான அரசாணை பிறப்பிப்பதில் வீண் காலதாமதம்  ஏற்படுத்துவது  தவிர்க்கப்படவேண்டும்.
       புதியதாக  தொடங்கப்பட உள்ள தொடக்கப்பள்ளிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஆனால் அப்பள்ளிக்கு தலைமைஆசிரியர் ,இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்  அனுமதித்து ஆணை வழங்கப்படவில்லை. அதேபோல் நடுநிலைப்பள்ளி  உயர்நிலை  பள்ளியாக தரம்  உயர்த்தப்பட்டுள்ளது . ஆனால் அப்பள்ளியின் தொடக்கநிலை வகுப்புகள்  பிரிக்கப்பட்டு தொடக்கப்பள்ளி  உருவாக்கி அதற்கு தலைமை ஆசிரியர்  பணியிடம்  அனுமதித்து ஆணையினை அத்துடன் சேர்த்து வெளியிட்டு இருந்தால் பாராட்டி இருக்கலாம்.
          இப்போதோ தலைமை  ஆசிரியர்  பதவி உயர்வு பெற்றவர் மீண்டும் கீழ்நிலை  பதவிக்கு  மாறுதல்  செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது .

No comments:

Post a Comment