வலங்கைமானில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், தொடக்க மற்றும் தொடக்க உயர்நிலை ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று நடந்தது.
வலங்கைமான் ஒன்றிய அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மையம் சார்பில், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு சதுரங்க விளையாட்டு மற்றும் எளிய உடற்பயிற்சி குறித்த செயல்முறை விளக்க பயிற்சியும்; தொடக்க உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு கற்றல் அடைவுத்திறன் பயிற்சி முகாமும் நடந்தது.தொடக்கப்பள்ளி ஆசிரியரியர்களுக்கு வலங்கைமான் பெ.மே.நி.பள்ளியில் சதுரங்கம் உள்ளிட்ட உள்விளையாட்டு குறித்த பயிற்சி முகாமும்; தொடக்க உயர்நிலை ஆசிரியர்களுக்கு வட்டார வளமையத்திலும் பயிற்சி முகாம் நடந்தது. பயிற்சியினை அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுநர்கள் அளித்தனர்.
மதிப்பீடும் தரக்கண்காணிப்பும், தரக்கண்காணிப்பு கருவிகளும், தகவல் சேகரித்தலின் அவசியமும், அடைவுத்தேர்வுகள் முடிவுகளும், தீர்வுகளும், பள்ளியின் தர மேம்பாட்டு ஒர் ஆய்வு, ஆசிரியர் செயல்நிலைகள், தரக்கண்காணிப்பு அறிக்கை தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில், பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
No comments:
Post a Comment