Saturday, 30 May 2015

விடுமுறைக்கு பின் 1ம் தேதி பள்ளி திறக்கப்படும் நிலையில் அனுமதியின்றி கட்டப்பட்ட பிரபல தனியார் பள்ளிக்கு சீல் மாநகராட்சி அதிரடி; பெற்றோர் முற்றுகை !!


பெரம்பூர், : வியாசர்பாடி, எம்கேபி
நகர், 2வது குறுக்கு தெருவில்
கடந்த 20 ஆண்டுகளாக பிரபலமான
தனியார் பள்ளி செயல்பட்டு
வருகிறது. இங்கு, எல்கேஜி முதல்
10ம் வகுப்பு வரை 2,500க்கும்
மேற்பட்ட மாணவ, மாணவிகள்
படிக்கின்றனர். இந்த பள்ளி கட்டிடம்
முறையான அனுமதி இன்றி
கட்டப்பட்டதாக மாநகராட்சிக்கு
புகார்கள் சென்றன. அதன்பேரில்,
கடந்த 2012ம் ஆண்டு, இதுபற்றி
விளக்கம் கேட்டு பள்ளி
நிர்வாகத்துக்கு மாநகராட்சி
சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
ஆனால், பள்ளி நிர்வாகம் எவ்வித
பதிலும் அளிக்கவில்லை என
கூறப்படுகிறது. இதுதொடர்பாக
மாநகராட்சி சார்பில் நீதிமன்றத்தில்
வழக்கு தொடரப்பட்டது. வழக்கை
விசாரித்த நீதிமன்றம்,
அனுமதியில்லாமல் கட்டப்பட்ட இந்த
பள்ளிக்கு சீல் வைக்க
மாநகராட்சிக்கு அனுமதி
வழங்கியது.
இந்நிலையில், நீதிமன்ற
உத்தரவுப்படி மாநகராட்சி அதிகாரி
கோவிந்தராஜ் தலைமையில் 20க்கும்
மேற்பட்ட அதிகாரிகள் நேற்று
மேற்கண்ட பள்ளியை பூட்டி சீல்
வைக்க சென்றனர். எம்கேபி நகர்
போலீசார் அவர்களுடன்
பாதுகாப்புக்கு சென்றனர்.
இதை அறிந்ததும் அப்பள்ளியில்
பயிலும் மாணவ, மாணவிகளின்
பெற்றோர் பள்ளி முன்பு திரண்டு,
அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், போலீசார் உதவியுடன்
மாநகராட்சி அதிகாரிகள் பள்ளியை
பூட்டி சீல் வைத்தனர்.இதுகுறித்து
மாணவர்களின் பெற்றோர்
கூறுகையில், ‘ஆண்டுத் தேர்வு
விடுமுறை முடிந்து வரும் 1ம்
தேதி பள்ளி திறக்கப்பட உள்ளது.
இந்த கல்வி ஆண்டுக்கான அட்மிஷன்
தொகையை கட்டியுள்ளோம்.
பள்ளிக்கு திடீரென சீல் வைப்பதால்,
மாணவர்களின் படிப்பு
பாதிக்கப்படும். இந்த நேரத்தில்
வேறு பள்ளியில் சேர்க்க அட்மிஷன்
கிடைக்காது. எங்களின் நிலை
என்னவாகும். நாங்கள் என்ன
செய்வது என்று தெரியவில்லை.
பிள்ளைகளின் எதிர்காலம்
வீணாகாமல் இருக்க, அரசு தீவிர
நடவடிக்கை எடுக்க வேண்டும்,’
என்றனர்.இதற்கிடையில் அப்பகுதி
அதிமுக கவுன்சிலர், மாநகராட்சி
அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை
நடத்தினர். அப்போது, இதுபற்றி
மேயரிடம் பேசி, உரிய நடவடிக்கை
எடுக்கப்படும், என அவர்கள்
தெரிவித்தனர்.

No comments:

Post a Comment