தமிழகத்தில் ஆண்டுதோறும் மே மாதத்தில் ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு நடப்பது வழக்கம். கடந்த ஆண்டு ஜூன் மாத நடுவில் பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. இந்த ஆண்டு கலந்தாய்வு எப்போது நடைபெறும் என்பது புரியாத புதிராகவே இருந்தது.இந்நிலையில் ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் திரு வா.அண்ணாமலை அவர்கள் தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது கலந்தாய்வானது ஜூலை மாதத்தில் 2 ஆம் வாரத்தில் நடைபெற வாய்ப்புள்ளது எனவும் அரசாணை ஜூன் மாத இறுதியில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment