Wednesday, 16 January 2019

LKG, UKG வகுப்புகளில் இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதற்கு எதிராக வழக்கு

அன்புடையீர் வணக்கம்.  அங்கன்வாடிகளில் LKG,UKG வகுப்புகளில் பணிபுரிய இடைநிலை ஆசிரியர்களை மாறுதல் செய்யும் பள்ளிக்கல்வித் துறையின் நடவடிக்கைக்கு எதிராக நமது அமைப்பின் சார்பில் நீதிமன்றத்தில் தடை ஆணை பெறுவது தொடர்பாக ஆலோசனை பெற அண்ணன் ஐபெட்டோ அவர்களின் வழிகாட்டுதல்படி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின்மூத்த வழக்கறிஞர் (senior counsel) திரு.அஜ்மல்கான் அவர்களை இன்று16.01.2019 மதுரையில் சந்தித்தோம். வழக்கு தொடர்பான அரசாணைகள், இயக்குநர் ஆணைகளை வழங்கி, அண்ணன் ஐபெட்டோ அவர்கள் வழக்கு தொடர்பாக தெரிவித்த ஆலோசனைகளையும் தெரிவித்தோம்.வழக்கு தொடர்பாக பல்வேறு விபரங்களை விவாதித்த பின் affidavit தயாரித்து 18.01.2019 அன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம் என வழக்கறிஞர் தெரிவித்தார்.நாளை மாலை மதுரை வந்து affidavit  நகல் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். Affidavit நகல் அண்ணன் ஐபெட்டோ அவர்களுக்கு அனுப்பப்பட்டு திருத்தங்கள் பெறப்பட்டு தாக்கல் செய்யப்பட உள்ளது.
தமிழக ஆசிரியர் கூட்டணியும், இலட்சக்கணக்கான ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள்,பணியாளர்களைக் கொண்ட ஜாக்டோஜியோ பேரமைப்பும்  உங்களோடு உறுதுணையாக நிற்கிறது.தொடக்கக் கல்வித்துறையை அழித்தொழிக்க நினைப்போரை சட்டரீதியாகவும்,போராட்டக்களத்திலும் சந்திப்போம். நமது தரத்தைக் குறைக்கும் எவ்வித ஆணையையும் பெறாமல் புறக்கணிப்போம். கட்டாயப்படுத்தி ஆணைகள் வழங்கப்பட்டாலும் ஜாக்டோஜியோ முடிவுப்படி பணியேற்காமல் தவிர்ப்போம். போராட்ட வாழ்த்துக்களுடன்
அ.வின்சென்ட் பால்ராஜ் பொதுச்செயலாளர்
தமிழக ஆசிரியர் கூட்டணி.

No comments:

Post a Comment