உங்கள் ஊரில் நீங்கள் பார்க்கும் நகர நிர்வாகத்தின் குடிநீர் தொட்டிகளுக்கு சில விதிமுறைகள் உண்டு.
1) அங்கு எப்போதும் ஒரு காவலாளி இருக்க வேண்டும்.
2) அங்கிருக்கும் ஆபரேட்டர் குடிநீர் தொட்டியை நீர் நிரப்பும் முன்னும், பின்னும் பார்வையிட வேண்டும்.
3) சுகாதார அதிகாரி நீரை ஆய்வு செய்து மக்கள் குடிக்க உகந்ததா என ஆய்வு செய்ய வேண்டும்.
இதெல்லாம் செய்த பிறகு தான் அந்த நீரை மக்களுக்கு விநியோகிக்க வேண்டும்.
ராமநாதபுரத்தில் நகரின் முக்கிய பகுதியில் உள்ள 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள குடிநீர் தொட்டியில் மூன்று நாட்களாக ஒரு சடலம் கிடந்துள்ளது.
காவலாளி, ஆபரேட்டர், சுகாதார அதிகாரி என மூவருமே தாங்கள் வாங்கும் அரசாங்க பணத்திற்கு 1% கூட பணிகளை முறையாக செய்யவில்லை என்பது கண்கூடு.
அதிர்ஷ்டவசமாக இப்போது வரை மக்களுக்கு ஏதும் நோய் தொற்று ஏற்படவில்லை. ஒருவேளை இதில் உயிரிழப்பு ஏற்பட்டாலும் இழப்பீடு அறிவித்து விட்டு சென்று விடுவார்கள்.
நீங்கள் நகரங்களில் வசித்தால் உங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் தொட்டியை கண்டறிந்து அங்கு இந்த விதிமுறைகள் பின்பற்றபடுகின்றனவா என உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்.
காலையில் வாக்கிங் போகும் போது அந்த பகுதியில் வசிக்கும் நண்பர்கள் சென்று பார்த்தால் போதுமானது.
இதையெல்லாம் நாம் பார்க்க மாட்டோம் என்பது தான் அவர்கள் அலட்சியம்.
மற்ற ஊர் புயல், வெள்ளத்திற்கு நேரம் செலவழித்து நிவாரணம் எடுத்து செல்வது போல உங்கள் பாதுகாப்பிற்காக கொஞ்சம் செலவிடுங்கள். மற்றவர்களுக்கும் பகிருங்கள்..
No comments:
Post a Comment