அனைவருக்கும் வணக்கம். இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடியில் துவங்கப்பட்டுள்ள LKG,UKG பள்ளிகளுக்கு பணியாற்ற அனுப்புவதற்கான கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது. ஜாக்டோஜியோ இந்த நடவடிக்கைக்கு கடும் அதிருப்தியை அரசுக்கு தெரிவித்துள்ளது. உரிய மனு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆசிரியப்பெருமக்கள் இந்த ஆணையைப் பெறாமல் தவிர்க்க வேண்டுமென ஜாக்டோஜியோ தெரிவித்துள்ளது. எனவே ஆசிரியரகள் இது தொடர்பான கலந்தாய்வுக்கு செல்லாமலும்,ஆணை வழங்கப்பட்டால் அதைப் பெறாமல் புறக்கணித்துவிட ஜாக்டோஜியோ கேட்டுக்கொள்கிறது. பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பணியாளர்களைக் கொண்ட ஜாக்டோஜியோ உங்களைப் பாதுகாக்க உங்களோடு நிற்கிறது என்ற ஒன்றுபட்ட உணர்வோடு நம்மை சிறுமைப்படுத்த நினைக்கும் ஆணையினை ஒருவர்கூட பெறாமல் புறக்கணித்து அரசுக்கு நம் எதிர்ப்பை உணர்த்துவோம். நம் பாதுகாப்பு அரணாய் விளங்கும் அண்ணன் ஐபெட்டோ அவர்கள் இன்று விடுத்துள்ள அறைகூவலில் தெரிவித்துள்ளபடி சத்தணவுப் பணியைப் புறக்கணித்துப் போராடி அப்பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட வீர வரலாற்றுக்கு சொந்தமான ஆசிரியப் பேரினமே களத்திலே கரம் கோர்த்து நிற்போம். தொடக்கக் கல்வித்துறையை சீர்குலைக்க நினைக்கும் சக்திகளை முறியடிப்போம். கல்வித்துறையைப் பாதுகாப்போம்.
அ.வின்சென்ட்பால்ராஜ் பொதுச்செயலாளர்
தமிழக ஆசிரியர் கூட்டணி
Friday, 11 January 2019
பால்வாடிப்பணியை புறக்கணிப்போம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment