Tuesday, 24 December 2019

மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குனர் முனைவர் முத்து பழனிச்சாமி அவர்களுடன் நமது இயக்க சந்திப்பு

*மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குனர் முனைவர் முத்து பழனிச்சாமி அவர்களுடன் நமது இயக்க சந்திப்பு.*
*********************************
மதிப்புமிகு தொடக்க கல்வி இயக்குனர் அவர்களையும், இணை இயக்குனர் நிர்வாகம் ந.ஆனந்தி அவர்களையும் தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பில் 24.12.2019 இன்று ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் அவர்களும், மாநிலப் பொருளாளர் க.சந்திரசேகர், மாநில துணைச் செயலாளர் ஆ.இராஜசேகர் ஆகியோர் சந்தித்து பிரதான முக்கிய கோரிக்கைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி கேட்டுக்கொண்டோம். இந்த சந்திப்பில் சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் அவர்களும், கடவூர் வட்டார பொறுப்பாளர்களும் உடன் இருந்தார்கள்.

*கோரிக்கை:1* தொடக்கக் கல்வி, பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1997 முதல் 2000 ஆண்டு முடிய ஏற்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான எஸ்சி/எஸ்டி இடைநிலை ஆசிரியர் பின்னடைவு காலிப் பணியிடங்களில் பட்டதாரி ஆசிரியர் தகுதியுடன் நியமனம் செய்யப்பட்டவர்கள் உயர்கல்வித் தகுதி பெற்றமைக்கு ஊக்க ஊதியம் வழங்குதல் தொடர்பாக அரசாணை நிலை எண் 83 பள்ளிக்கல்வித்துறை நாள் 28.04.2017 அன்று வெளியிடப்பட்டது. இரண்டு ஆண்டுகளாக 420 ஆசிரியர்களுக்கும் இதுநாள் வரையில் உயர் கல்வித் தகுதிக்கான ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை என்பதை தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் பார்வைக்கு எழுத்துப்பூர்வமான அரசாணையுடன் கொண்டு வந்து வலியுறுத்தினோம். இந்தக் கோரிக்கையினை அஜந்தாவில் சேர்த்துக் கொள்கிறோம் உறுதியாக மாநிலம் முழுவதும் இருக்கிற தகுதியானவர்களுக்கு உயர் கல்வித் தகுதிக்கான ஊக்க ஊதிய உயர்வு, பணி நிறைவு பெற்றிருந்தாலும் அவர்களுக்கும் கிடைப்பதற்கு உடன் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்கள். ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் அவர்கள் பேசும்போது 22 ஆண்டுகளாக இவர்களுக்கு பதவி உயர்வும் இல்லை, கூடுதல் கல்வி தகுதிக்கு அரசாணை வெளியிட்டும் ஊக்க ஊதிய உயர்வும் வழங்கப்படவில்லை என்பதை வேதனை உணர்வுடன் தெரிவித்தார். மீண்டும் இயக்குனர் அவர்கள் மாநிலம் முழுவதும் உள்ள தகுதியுள்ளவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.

*கோரிக்கை:2* தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வு நிலைக்கு 5400 தர ஊதியம் நிர்ணயம் செய்தது சரிதான் என தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் தெளிவுரை வழங்கி இருப்பினும் பார்வையில் 22 பேருடைய எண்ணிக்கை மட்டும்தான் காட்டப்பட்டு இருப்பதால் அவர்களுக்கு மட்டும்தான் பொருந்தும் என்ற வகையில் சில முதன்மைக் கல்வி அலுவலர்கள் தெரிவித்து வருகிறார்கள். நிதித்துறை செயலாளரின் அரசாணை எண் 23 மற்றும் தெளிவுரை கடிதத்தின்படி தகுதியுடையவர்களுக்கு பொருந்தும் என தெளிவுரை மீண்டும் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டோம். முதன்மை கல்வி அலுவலரின் கூட்டத்தில் விளக்கம் அளிப்பதாக ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் அவர்களிடம் தெரிவித்தார்கள்.

*கோரிக்கை: 3* தேர்வுநிலை, சிறப்புநிலை விண்ணப்பித்தவர்களுக்கு ஓராண்டு காலம் முடிந்தும் இன்னும் அனுமதிக்கப்படாமல் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் உள்ளது. தனி முகாம் நடத்தியாவது தேர்வு நிலை, சிறப்பு நிலையினை காலம் கடத்தாமல் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டோம். தொடக்க கல்வி இயக்குனர் அவர்கள் தனி முகாம் நடத்தி விரைவில் தீர்வு காண்பதாக நம்மிடம் தெரிவித்தார்கள்.

*கோரிக்கை: 4* தூத்துக்குடி மாவட்டத்தில் வட்டாரக் கல்வி அலுவலர் ஒருவரின் ஊழல் நடவடிக்கை புகாரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆதாரப் பூர்வமாக கொடுத்தோம். இணை இயக்குனர் நிர்வாகம் அவர்களிடம் அந்த விண்ணப்பத்தினை கொடுத்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டார். விரைவு நடவடிக்கைக்கு வலியுறுத்தி கேட்டுக் கொண்டு விடை பெற்றுக் கொண்டோம்.

*தேர்வுத் துறை இயக்குனர் மதிப்புமிகு உஷாராணி அவர்களுடன் நமது சந்திப்பு.*

தேர்வுத்துறை இயக்குநர் மதிப்புமிகு உஷாராணி அவர்களுடனான சந்திப்பின் போது தேர்வுத்துறை இணை இயக்குனர் மேல்நிலைக்கல்வி திரு ராமசாமி அவர்களும் உடன் இருந்தார்கள். ஆசிரியர் பயிற்சி சான்றுக்கு உண்மைத் தன்மை பெறுவதில் மிகவும் காலங் கடத்தப்பட்டு வருவதை கவனத்தில் கொண்டு வந்தோம். 89 க்கு முன்னர் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் கண்டுபிடிப்பதற்கான அடையாளம் இல்லை என்று தேர்வுத் துறையில் தெரிவிக்கிறார்கள். ஒரிஜினல் சான்றிதழை பார்த்து அவர்களுக்கு உண்மைத்தன்மை வழங்க வேண்டுமென வலியுறுத்தினோம். உடன் நாம் கொடுத்த விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை எடுக்க ஆவன செய்தார்கள்.

*மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் முனைவர் அ.கருப்பசாமி அவர்களுடன் சந்திப்பு.*

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கைதாகி சிறை சென்றவர்களுக்கு 17b குற்றச்சாட்டுகள் போடப்பட்டன. நீதிமன்றம் சென்று முதல் தகவல் அறிக்கையினை (FIR) ரத்து செய்வதற்கு தீர்ப்பாணை பெற்றால் அதன் மூலம் முதல் தகவல் அறிக்கை (FIR) ரத்தாகிவிடும். முதல் தகவல் அறிக்கை ரத்தானால் (FIR) 17b குற்றச்சாட்டு அமல்படுத்த வாய்ப்பில்லை என்று நம்மிடம் தெரிவித்தார்கள். இன்னும் சில பொது விவரங்கள் கேட்டுக்கொண்டு இயக்குனர் அவர்களிடம் இருந்து விடை பெற்றோம்.

பொதுவாக இன்றைய சந்திப்பு இயக்கத்திற்கு அப்பாற்பட்டு உள்ள அனைத்து இயக்க ஆசிரியர்களுக்கும் நன்மைகளைப் பெற்றுத்தரும் சந்திப்பாக அமைந்தது என்பதை பெருமிதத்துடன் பகிர்ந்து கொள்கிறோம்.

26 12 2019 அன்று பள்ளிக்கல்வி இயக்குனர், பள்ளிக் கல்வி இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி), பள்ளிக் கல்வி இணை இயக்குனர் மேல்நிலைக்கல்வி அவர்களையும் அண்ணன் ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் அவர்கள் சந்திக்க உள்ளார் என்பதை தகவலுக்காக தெரிவித்துக் கொள்கிறோம். நம் இயக்கத்தின் பணி பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அன்றாடம் தீர்வு காணுகின்ற பணியாகும் என்பதை சூளுரைத்து தெரிவித்துக் கொள்கிறோம்.

*வாழ்த்துகளுடன்  அண்ணன்,            வா.அண்ணாமலை ,  ஐபெட்டோ அகில  இந்திய செயலாளர். தமிழக ஆசிரியர் கூட்டணி, AIFETO ( ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS)*

No comments:

Post a Comment