Friday, 24 January 2020

தொடக்கக்கல்வி இயக்குநர் முனைவர் முத்து பழனிச்சாமி அவர்களுடன் சந்திப்பு

🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🌇🌃🌇🌃🌇🌃🌇🌃🌇🌃🌇🌃🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊

*_நேற்று 23.01.2020 சென்னையில் மதிப்புமிகு. தொடக்கக்கல்வி இயக்குநர் முனைவர் முத்து பழனிச்சாமி அவர்களை சந்தித்து நமது தமிழக ஆசிரியர் கூட்டணியின் இயக்க நாட்காட்டியினை வழங்கினோம். பல்வேறு கோரிக்கைகள், 5,8 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைமுறைகள், 5400 தர ஊதிய தணிக்கைத் தடை நீக்கம், sc,st பின்னடைவுப் பணியிடங்களில் நியமனம் செய்யப்பட்டோருக்கு உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு, நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பி.லிட்.,பி.எட்., ஊக்க ஊதிய உயர்வு ஆகிய கோரிக்கைகள் மீது விரைவு நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக் கொண்டோம். தென்காசி ஆர்.சி.பள்ளி பணிநியமன ஒப்புதல் மற்றும் அப்பள்ளியில் பணிநிரவலில் பணியேற்றமைக்கு ஒப்புதல் குறித்தும்  தெரிவித்து விரைவு நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக் கொண்டோம். அனைத்து பிரச்சனைகளையும் கவனமுடன் கேட்டு, உடன் நடவடிக்கை மேற்கொள்வதாக மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் உறுதியளித்தார்._*

*_தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் மாநிலப் பொறுப்பாளர்களிடம் பேசும்போது அண்ணன் ஐபெட்டோ அவர்களின் மிகச்சிறந்த அணுகுமுறை, ஆசிரியர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் காட்டும் உறுதி,  வெளியிடும் செய்திகளில் காணப்படும் எழுத்து வன்மை என ஒவ்வொரு செயல்பாடுகளையும் குறிப்பிட்டு வியந்து போற்றினார். அதிகாரிகள் சரியாக செயல்படுவதற்கு  அண்ணன் அவர்களின் Whatsapp பதிவுகள் உறுதுணையாக இருப்பதாகத் தெரிவித்தார். அண்ணன் ஐபெட்டோ அவர்களிடமும் தொடர்ந்து உங்கள் வழிகாட்டுதல் இருக்க வேண்டும் என தெரிவித்துக் கொண்டார்._*

*_நன்றி தெரிவித்து விடைபெற்றுக் கொண்டோம்._*

*_அ.வின்சென்ட் பால்ராஜ்,_*
*_பொதுச்செயலாளர்,_*
*_தமிழக ஆசிரியர் கூட்டணி._*

🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🛡🛡🛡🛡🛡🛡🛡🛡🛡🛡🛡🛡🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊

No comments:

Post a Comment