சமீபத்தில் சப் இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்திக்கொன்ற பிரபு என்ற ரவுடியையும் அவன் கூட்டாளியையும் போலீசார் என் கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றனர்.இதற்கு முன்பு எத்தனையோ என் கவுண்ட்டர்கள் நடந்துள்ளன.
ஒவ்வொரு என் கவுன்ட்டருக்குப்பின்பும் தனியார் தொலைக்காட்சிகளில் பீக் அவர்களில் நாலு பேர் உட்கார்ந்து கொண்டு விவாதிப்பதும் வாடிக்கையான விஷயங்களாகி விட்டன.
என் கவுண்ட்டர்களுக்கு மக்கள் மத்தியிலும் அபரிமிதமான வரவேற்பு காணப்படுகிறது.
இதற்கு சமீபத்தில் 5 கொள்ளையர்களை என் கவுண்ட்டர் செய்ததைக்கண்டித்து என் கவுண்ட்டர் செய்யப்பட்ட இடத்தை பார்வையிட வந்த மனித உரிமை இயக்கத்தினரை அப்பகுதி மக்கள் விரட்டி அடித்ததே உதாரணமாகும்.
இத்தகைய என் கவுண்ட்டர்களும் அதற்கு உள்ள வரவேற்பும் நீதித்துரை மீதான அவநம்பிக்கையையே காண்பிக்கின்றன.
கணக்கு வழக்கற்ற வாய்தாக்கள், எண்ணற்ற சாட்சி விசாரணைகள்- சாட்சிகளின் பல்டிகள் வேறு-ஒருவேலை தீர்ப்பு கூறினாலும் ஏகப்பட்ட அப்பீல் வசதிகள் என்று நீதித்துறை மீதான அவநம்பிக்கைக்கு காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
என் கவுண்ட்டர்களை எதிர்த்து குரல் கொடுப்போர் முதலில் நீதித்துறையில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்களுக்காக குரல் கொடுப்பதே உண்மையான தீர்வாக அமையும்.
Tuesday, 25 December 2012
என்கவுண்ட்டர்கள் ஏன் செய்யப்படுகின்றன?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment