காதல் படத்தை நான் முதன்முதல் பார்த்தபோது என் மனதை மிகவும் பாதித்தது.
அப்படத்தை பார்த்துவிட்டு அதன் இயக்குநர் பாலாஜி சக்திவேல் மீது ஒரு அபிமானம் வந்தது.
ஆனால் அதன் பின்னர் அவர் இயக்கத்தில் வந்த கல்லூரியாகட்டும் அதன்பிறகு வந்த வழக்கு எண் 18/9 ஆகட்டும் ஒரு இயக்குநராக அவர் தோல்வி அடைந்து விட்டார் என்பதையே காட்டுகிறது.
காதல் படத்தில் நடிகர்களிடமிருந்து சிறந்த நடிப்பை வெளிக்கொண்டுவந்த பாலாஜி அடுத்த படங்களில் அவ்விஷயங்களில் படுதோல்வி அடைந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.
அதுவும் வ.எண் 18/9 படத்தில் நடிகர்களிடம் சுத்தமாக டயலாக் டெலிவரியே இல்லை. நிலமை இவ்வாறு இருக்க படம் ஓடாமல் போனதற்கு மக்களைக்கறை பட்டுக்கொள்வது எந்த விதத்திலும் நியாயமே இல்லை.
வ. எண் படத்தில் பாலாஜியால் நடிகர்களின் முகத்தைக்கூட காட்ட முடியவில்லை.காரணம் நடிகர்களுக்கு டயலாக் வாயில் நுழையவில்லை.
காமெடி காட்சிகளும் எடுபடவில்லை.
இதையெல்லாம் நாம் கூறக்காரணம் அடுத்த படத்திலாவது காதல் பாலாஜியை நாம் பார்க்கவேண்டும் என்பதற்காகத்தான்.
Tuesday, 15 January 2013
பாலாஜி சக்திவேலுக்கு என்னாயிற்று?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment