ஊர்தோறும் ஆசிட் கடை
தமிழ்நாடு-பிப்,25
தமிழ்நாட்டில் பட்டி தொட்டி எங்கும் கூப்பிடு தூரத்தில் "குடிமகன்"களின் நலனை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ளது அனைவரும் அறிந்ததே.
தற்போது ஒருதலைக் காதலர்களின் குறைகளைப்போக்க அரசு போர்க்கால அடிப்படை யில் நடவடிக்கை எடுக்க ஆயத்தமாகி வருவதாக நமது சிறப்பு நிருபர்கள் செய்திகளை அனுப்பிய வண்ணம் உள்ளனர்.
அவர்கள் தெரிவிப்பது என்ன வென்றால் தமிழகத்தில் ஒருதலைக்காதலர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் உள்ளது என்பதை தினசரி பத்திரிக்கைகளைப் படிக்கும்போது அறிய முடிகிறது.
இந்த ஒருதலை( as also தறுதலை) கள் தங்களை ஏமாற்றி ய அல்லது தங்களை ஏமாற்றி யதாக தாங்களே கற்பித்துக் கொண்ட பெண்கள் மீது ஆசிட் வீச ஆசிட் கிடைக்காமல் அல்லாடுலதாக அரசுக்கு மனுக்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த மனுக்களை பரிவுடன் பரிசீலித்த எனது அரசு - எப்படி டாஸ்மாக் கடைகளை தமிழகம் எங்கும் அமைத்து சமூகத்தில் ஒரு பரட்சியை ஏற்படுத்தி யதோ அதேபோல் - நாடெங்கும் ஆசிட் கடைகளை திறந்திட முடி வு செய்துள்ளது. இதன்மூலம் இனி ஒரு தலைக் காதலர்கள் ஆசிட்டுக்காக அலைந்து திரிய வேண்டி ய அவல நிலை போக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சி யுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் முலம் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 2378 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்படும் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்' என்று ஒருவர் அறிக்கை தயார் செய்துகொண்டு இருந்ததாக நமது சிறப்பு ச்செய்தியாளர் தெரிவிக்கிறார்.
Tuesday, 26 February 2013
எதிர்கால செய்திகள்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment