Thursday, 27 November 2014

பள்ளியின் அவலம்!

இடைப்பாடி அருகே அரசிராமணி
ஊராட்சி ஒன்றிய
பள்ளி தனியாருக்கு சொந்தமான
பாதுகாப்பு இல்லாத
ஒரு கட்டடத்தில் இயங்கி வருகிறது.
பேரூராட்சி நிர்வாகம் இடம் ஒதுக்க
தீர்மானம்
நிறைவேற்றி கொடுத்தும் மாவட்ட
வருவாய் நிர்வாகத்தின்
அலட்சியத்தால் குழந்தைகள்
பாதுகாப்பு கேள்விக்குறியாக
உள்ளது.
சேலம் மாவட்டம்
இடைப்பாடி அருகே அரிசிராமணி
பேரூராட்சிக்குட்பட்டது
குஞ்சாம்பாளையம்
மாரிக்கவுண்டன்காடு. சுமார்
50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்
வசிக்கின்றனர். பெரும்பாலானோர்
விவசாய
கூலி தொழிலுக்கு செல்பவர்கள்.
கட்டாய கல்வி உரிமை சட்டம்
அமலாக்கத்திற்கு பின்னர்
ஒரு கிலோ மீட்டர் இடைவெளிக்குள்
ஆரம்ப பள்ளிகள் இருக்கவேண்டும்
என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இக்கிராமத்தில்
முன்பு பள்ளிக்கூடமே இல்லை.
இதனால் குழந்தைகள்
பாதிக்கப்பட்டனர். கட்டாய
கல்வி உரிமை சட்டம் அமலாக்கத்தின்
விளைவாக கடந்த 2013ம்
ஆண்டு அக்டோபர் 3ம்
தேதி மாரிக்கவுண்டன்காடு
பகுதியில் ஆரம்ப
பள்ளி தொடங்கப்பட்டது. சொந்த கட்டட
வசதி ஏற்படுத்தும் வரை தனியார்
கட்டடத்தில் பள்ளி செயல்பட
முடிவு செய்யப்பட்டது.
ஏற்கனவே பள்ளிக்கு இடத்தை
கொடுத்த தனியார் உரிமையாளர்
வேறு நபருக்கு கட்டடத்தை விற்பனை
செய்தார். இதையடுத்து 6
மாதத்திலேயே பள்ளியை வேறு
கட்டடத்திற்கு மாற்றவேண்டிய
கட்டாயம் ஏற்பட்டது.
குக்கிராமத்தில்
பள்ளி நடத்துவதற்கு ஏற்ற
அடிப்படை வசதி இல்லை.
இந்நிலையில்
அங்கு ஏற்கனவே சிறிய அளவில்
ரைஸ் மில்லாக செயல்பட்ட
ஒரு சிறிய கட்டடம் மட்டும்
கிடைத்தது. தர மறுத்த அதன்
உரிமையாளரிடம்
பள்ளி தலைமையாசிரிர்
கெஞ்சி கூத்தாடி இடத்தை
வாடகைக்கு பிடித்தார்.
கட்டடத்தின் மேற்கூரையின்
ஒரு பகுதி சிமெண்ட்
கூரை வேயப்பட்டுள்ளது.
முன்பகுதியில்
தென்னை ஓலையால்
கூரை வேயப்பட்டுள்ளது. அருகில்
ஓலை கூரையுடன் கூடிய
ஒரு கடையும் செயல்படுகிறது.
நடப்பு கல்வியாண்டில் 5ம்
வகுப்பு வரை 27 குழந்தைகள்
படித்து வருகின்றனர்.
தரை தளத்தை தவிர வேறு எந்த
வசதியும் இல்லை.
குழந்தைகளுக்கு கழிப்பிட
வசதியோ, மைதானமோ ஏதும்
அங்கு கிடையாது.
குழந்தைகளின் நலனை கருத்தில்
கொண்டு அரசிராமணி பேரூராட்சி
நிர்வாகம் தங்கள் பகுதியில் உள்ள
பேரூராட்சிக்கு சொந்தமான
புறம்போக்கு நிலத்தில்
ஒரு ஏக்கரை ஒதுக்கீடு செய்து
தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால்
அந்த இடத்திற்கு பட்டா கொடுத்தால்
மட்டுமே கட்டடம்
கட்டுவதற்கு முறைப்படி நிதி
ஒதுக்கமுடியும். இதற்காக சேலம்
மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம்
மூலம்
பட்டா கேட்டு வருவாய்த்துறைக்கு
விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால்
இதுவரை பட்டா கொடுக்கவில்லை.
இதனால் பள்ளி கட்டடம் அமைப்பதும்
கேள்விக்குறியாக உள்ளது.
கடந்த 2004ம் ஆண்டு கும்பகோணம்
பள்ளியில் ஏற்பட்ட தீ
விபத்துக்கு பின்னர்
ஒரு பள்ளிக்கான
பாதுகாப்பு வசதிகள்
எவ்வாறு இருக்கவேண்டும் என
வரையறை செய்யப்பட்டுள்ளது.
இதை பின்பற்றாத தனியார்
பள்ளிகள்
மீது கல்வித்துறை நடவடிக்கை
எடுக்கிறது.
ஆனால் ஒரு அரசு பள்ளியில்
அடிப்படை விதிகள்
ஏதுமே பின்பற்றமுடியாத
நிலையில் செயல்பட்டு வருகிறது.
தமிழக அரசின் மூத்த அமைச்சர்களில்
ஒருவராக உள்ள
நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்
எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த
தொகுதியிலேயே இந்த அவல
நிலை நீடிப்பது கவலையளிக்கிறது.
மாவட்ட வருவாய் நிர்வாகம்
நேரடி கவனம்
செலுத்தி அப்பள்ளிக்கு விரைவில்
இடம் ஒதுக்கினால் மட்டுமே கட்டடம்
ஏற்படுத்தமுடியும். இதன் மூலம்
அடுத்த
கல்வியாண்டிலாவது பள்ளி புதிய
கட்டடத்தில் செயல்படும். பள்ளியில்
சேரும் குழந்தைகள்
எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

No comments:

Post a Comment