Thursday, 27 November 2014

மகளிருக்கு கல்வி கற்றுக்கொடுப்பது குடும்பத்தில் விளக்கேற்றுவதற்கு சமம

மகளிருக்கு கல்வி
கற்றுக்கொடுப்பது குடும்பத்தில்
விளக்கேற்றுவதற்கு சமம்
என்று திருச்சியில்
நேற்று நடைபெற்ற
விழிப்புணர்வு நிகழ்ச்சியில்
மாவட்ட மகளிர் நீதிமன்ற
அமர்வு நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின்
தெரிவித்தார்.
மகளிருக்கு எதிரான
வன்முறை எதிர்ப்பு தினத்தை
முன்னிட்டு திருச்சி காயிதே
மில்லத் தொடக்கப் பள்ளியில் மாவட்ட
சட்டப் பணிகள் ஆணைக் குழு மற்றும்
பிடிஐ நிறுவன மகளிர்
ஆதரவு மையம் சார்பில் நடைபெற்ற
சிறப்பு நிகழ்ச்சிக்குத்
தலைமை வகித்து அவர் மேலும்
பேசியதாவது: பெண்
குழந்தைகளை படிக்கவைத்து
பெரிய பதவியில் அமர வைக்க
வேண்டும் என பெற்றோர்
நினைக்கும்போது வன்கொடுமை
நடக்காது. எனவே, அவர்களிடம்
பெற்றோர் நண்பர்களாகப் பழக
வேண்டும். மேலும் அவசியமற்ற
காரியத்தை பெண்கள்
புறக்கணித்தால் அவர்கள்
வன்கொடுமைக்கு ஆளாக
மாட்டார்கள். பெண்களுக்கு ஏற்படும்
எந்த ஒரு பிரச்னை க்கும்
தீர்வு காண
எப்போது வேண்டுமானாலும்
இலவச சட்ட
உதவி மையத்தை அணுகலாம்.
அவர்களுக்கு உதவிசெய்ய நாங்கள்
காத்திருக்கிறோம் என்றார்.

No comments:

Post a Comment