Thursday, 27 November 2014

பள்ளி மாணவர்களை விஷ வண்டுகள் கடிப்பு

ராமநாதபுரம்
அருகே விஷ வண்டுகள் கடித்ததில்
பள்ளி குழந்தைகள் காயம்
அடைந்தனர். ராமநாதபுரம்
அருகே குத்துக்கல் வலசையில்
உள்ள தனியார் நர்சரி, தொடக்கப்
பள்ளியில் சுப்புத்தேவன் வலசை,
கொட்டியர க்காரன்
வலசை பகுதிகளைச் சேர்ந்த
குழந்தைகள் படிக்கின்றனர். இவர்கள்
நேற்று காலை வேனில்
மேதலோடை பகுதியில்
சென்றபோது, ஜன்னல் வழியாக
வேனுக்குள் புகுந்த விஷ
வண்டுகள் கடித்தது. இதில்
சுப்புத்தேவன் வலசை பார்கவி, 5,
விஷ்வா, 8, கொட்டியக்காரன்
வலசை முகமது பாசிர், 8,
சகானா பர்வீன், 6, ஆகியோர்
மயங்கி விழுந்தனர். இவர்கள்
ராமநாதபுரம்
அரசு மருத்துவமனையில்
சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

No comments:

Post a Comment