Thursday, 27 November 2014

ஆசிரியர் தாக்கப்பட்ட வழக்கு

தனியார் பள்ளி ஆசிரியர்
தாக்கப்பட்ட வழக்கில், 30 பேரின்
ஜாமின் மனுவுக்கு பதிலளிக்க,
போலீசாருக்கு 'நோட்டீஸ்' அனுப்ப,
உத்தரவிட்டுள்ளது.
கோடம்பாக்கத்தில், தனியார்
பள்ளியின் ஆசிரியர் தாக்கப்பட்ட
வழக்கில், செந்தில்நாதன்,
பாலசுப்ரமணியன், வேலுசாமி,
மகேஷ், கிருஷ்ணமூர்த்தி உட்பட, 24
பேரை, போலீசார் கைது செய்தனர்.
அவர்களில், செந்தில்நாதன்,
பாலசுப்ரமணியன்,
வேலுசாமி ஆகியோர் ஜாமின்
கோரி, சென்னை,
முதலாவது கூடுதல் செஷன்ஸ்
நீதிமன்றத்தில், மனுக்கள் தாக்கல்
செய்து இருந்தனர். இந்த மனுக்கள்,
நேற்றுமுன்தினம்
விசாரணைக்கு வந்தது.
விசாரணையை, டிச., 1ம் தேதிக்கு,
நீதிபதி மாலதி, தள்ளிவைத்தார்.
இதையடுத்து, சென்னையைச்
சேர்ந்த அருளானந்தம், அருணா,
விஜயகுமார் உட்பட ஆறு பேர், முன்
ஜாமின் கோரியும், ஜாமின் கோரி,
21 பேரும், மனு தாக்கல் செய்தனர்.
அவர்களின் ஜாமின், முன் ஜாமின்
மனுக்கள், நீதிபதி மாலதி முன்,
நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுக்களுக்கு, டிச., 1ம் தேதிக்குள்,
போலீஸ் தரப்பில் பதிலளிக்கும்படி,
நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment