திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சவளக்காரன் பள்ளி மேற்கூரை இடிந்து 11 மாணவர்கள் காயமுற்ற சம்பவம் நடந்த அடுத்த நாளே போர்க்கால அடிப்படையில் அதிகாரிகள் ஒவ்வொரு பள்ளியாக வந்து இடிந்து, பாழடைந்த பள்ளிக்கட்டிடங்களை அளவெடுத்து வருகின்றனர்.
இதில் கொடுமை என்னவென்றால் இந்த கட்டிடங்கள் ஏற்கனவே பலமுறை அளவு எடுக்கப்பட்டவைதான்!
இவ்வளவுக்கும் இக்கட்டிடங்களை இடிப்பதால் அரசுக்கு எந்த செலவும் ஏற்படப்போவதில்லை! வருமானம் தான் கிடைக்கப்போகிறது.
பழைய அரசுக்கட்டிடங்கள் என்றால் ஒப்பந்தக்காரர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. அரசுக்கட்டிடங்களை இடிக்கும் போது செங்கற்கள் உடையாமல் முழுமையாக சேதாரம் இன்றி கிடைக்கும்! அந்த அளவு ‘ தரமான' சிமெண்ட் கலவையை போட்டு கட்டிய கட்டிடமாக்கும்!!
அதேபோல இரும்புக்கம்பிகள் அதிக சேதாரம் இன்றி கிடைக்கும். இந்த இரும்புக்கம்பிகளை வாங்க பழைய இரும்புக்கம்பி கடைக்காரர்கள் நான்..நீ.. என்று போட்டி போடுவார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!
ஆகவே இனியாவது அரசு அதிகாரிகள் அளவெடுத்ததோடு விட்டுவிடாமல் பழைய கட்டிடங்களை இடித்து மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Thursday, 11 December 2014
இடிந்து பள்ளிக்கட்டிடங்களை அளவெடுக்கும் அதிகாரிகள்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment