Saturday, 13 December 2014

பாரதியார் பிறந்த நாள் விழா

பாரதியார் பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவர்கள் பங்கேற்ற, 'பாரதியார் கவிதைகள்' குறித்த பேச்சுப்போட்டி நடந்தது.
பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. கோவை, ராம்நகர் சபர்பன் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பாரதிவிழாவின் முதல்நாளில், பள்ளி மாணவர்களையும், ஆசிரியர்களையும், பொதுமக்களையும் பரவசப்படுத்திய 'ஆயிரம் பாரதிகள்' சங்கமித்த நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து பாரதி பாடல்களை மாணவர்கள் பாடி,நாட்டுப்பற்றை பறைசாற்றினர். நேற்று முன்தினம், பாரதி பாசறை சார்பில் பாரதியார் கவிதைகளின் தலைப்புகளில் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற பேச்சுப்போட்டி நடந்தது. இதில், பள்ளி மாணவர்கள் பங்கேற்று பாரதியார் கவிதைகளின் நடை, சுதந்திர வேட்கை, தேசபக்தி, தெய்வ பக்தி, வீரம் குறித்து பேசி பார்வையாளர்களை மெய்சிலர்க்க வைத்தனர். பேச்சுப்போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பாரதி பாசறை சார்பில் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிகளை சபர்பன் பள்ளி நிர்வாகத்துடன் இணைந்து, ஒருங்கிணைப்பாளர் மோகன்சங்கர் ஏற்பாடு செய்திருந்தார். நேற்று மாலை, கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் பாரதியார் பாசறை சார்பில் பாரதியின், முதல் காதல் நாட்டிய நாடகம் நடந்தது.

No comments:

Post a Comment