Tuesday, 3 March 2015

போர்க்களம் காண புறப்படு தோழா!

     எக்காலத்திலும் இல்லாத இழிநிலையை தந்தது இந்த ஊதியக்குழு!
      எள்ளளவும் ஆசிரியர்களை மதிக்கவில்லை மாநில அமைச்சர் குழு!
      மத்திய அரசு ஊதியத்தை ஆறாவது ஊதியக்குழு முத்தியநிலையிலும் தரவில்லை!
        சத்தியத்தையும் காப்பாற்றவில்லை!!
       எத்திசையும் ஏமாற்றம்தான் ஆசிரியனுக்கு!
     கட்டியம் கூறி புறப்படு.. தோழா!
      வெட்ட வெட்ட துளிர்க்கும் எம் போராட்டம்!
     உள்ளத்தை திறந்து வா... உன்னதை பெற்றிட வா!!
     மார்ச் 8...
இறுதிப்போரின் முதல்கட்ட மோதல்!!
    முற்றுகையிட கஜினியாய் வா...
      பதினேழு முறை அல்ல.. பதினேழாயிரம் முறை போராடியாவது பெற்றிடுவோம் நம் உரிமைகளை!
     ஜாலியாக வராதே...
     ஜாலியன்வாலாபாக் என நினைத்து வா...!
      மார்ச் 8ல் உன் உரிமை முழக்கம் சிங்கத்தின் கர்ஜனை என நகரத்தின் எட்டு திக்கும் எதிரொலிக்கட்டும்!
      கேளாக்காதுகள் செவிடாய் போகும் வண்ணம் உன் குரல் ஒலிக்கட்டும்!
      ஜாக்டோ நமக்கு ஜாக்பாட்டை பெற்றுத்தரும்!

No comments:

Post a Comment