திரு. T.S. எழுதுகிறார்:
சென்னை, சேலம்,
காஞ்சி, மற்றும்
திருவள்ளூர்
மாவட்டங்களில் 50,000
மாணவர்களுக்குமேல்
SSLC தேர்வு எழுதி,
தேர்ச்சி விகிதத்தில்
முன்னணியில்
உள்ளார்கள். திருவாரூர்
மாவட்டத்தில் வெறும்
18926 மாணவர்கள் தேர்வு
எழுதி 15857 மாணவர்கள்
மட்டும் பாஸ் செய்து
,மாநிலத்தில் கடைசி
இடத்துக்கு
வந்துள்ளார்கள்.
திருவாரூர்
மாவட்டத்துக்காரன் என்ற
முறையில் மிகுந்த
வருத்தமாக உள்ளது.
முன்பு நூறு சதவிகித
தேர்ச்சி பெற்ற
பள்ளிகளை கொண்டது
இந்த மாவட்டம். இனிவரும்
காலங்களில் முதல் 5
வரிசையில் ,தேர்ச்சி
விகிதத்தில் ,
திருவாரூர் மாவட்டம்
வருவதற்கு
மாணவர்களிடமும்
ஆசிரியர்களிடமும்
வேண்டி கேட்டு
கொள்கின்றோம் .
இறைவனிடம்
வேண்டுவதை விட
சம்பந்தப்பட்டவர்களிடம்
வேண்டுவது
சிறப்பானது.
No comments:
Post a Comment