தீர்ப்பு விபரம்:
ஒழுங்கு நடவடிக்கை சம்பந்தமான தகவல்கள்
மனுதாரர் /மேல்முறையீட்டாளரின் மனுவை நோக்கும் போது மனுதாரர்/மேல்முறையீட்டாளர்
கோரும் தகலானது 3ம் நபர் மீது பெறப்பட்ட புகார்கள் தொடர்பான கோப்புகள் மீது
எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை தகவலாக கோரியுள்ளது தெரிய வருகிறது.
மேலும் மேல்முறையீட்டாளர் கோரும் மேற்படிதகவலை நோக்கும் போது, மாண்பமை
உச்சநீதிமன்றம் *GIRISH RAMCHANDRA DESHPANDE -Vs- CEN. INFORMATION COMMR &
ORS. { SLP (CIVIL) No.27734/2012 Dt. 03.10.2012 } *என்ற வழக்கில்:
“The performance of an Employee/Officer in an organization is primarily a
matter between the employee and the employer and normally those aspects are
governed by the Service Rules which fall under the expression "personal
information", the disclosure of which has no relationship to any public
activity or public interest. On the other hand, the dislosure of which
would cause unwarranted invasion of privacy of that individual
…………….. the petitioner cannot claim those details as a matter of right"
"The Petitioner in the instant case has not made a *bona fide *public
interest in seeking information, the disclosure of such information would
cause unwarranted invasion of privacy of the individual under Section
8(1)(j) of the RTI Act." ……………
இத்தீர்ப்பு இவ்வழக்கிற்கும் பொருந்துமென ஆணையம் முடிவு செய்கிறது.
7. விசாரணையின் அடிப்படையிலும், ஆவணங்களின் அடிப்படையிலும் மனுதாரர்/
மேல்முறையீட்டாளர் கோரிய தகவல் மூன்றாம் நபர் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை
குறித்த தகவலாகவும், அதிக அளவிலான பொது நலன் கருதி மனு தாக்கல் செய்யப்பட்டதாக
இல்லாத சூழ்நிலையிலும் இவ்வழக்கில் மேலும் விசாரணை தேவையில்லையென ஆணையம் முடிவு
செய்து, இம்மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
(வழக்கு எண்.37610/E/2014 விசாரணை நடைபெற்ற நாள் 09.04.2015)
Thursday, 21 May 2015
மூன்றாம் நபர் தொடர்பான தகவல்களை த.அ.உ.சட்டம் மூலம் கேட்கமுடியாது- கோர்ட் தீர்ப்பு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment