Saturday, 29 December 2018

புத்தாண்டு வாழ்த்து சொல்ல என்னமா யோசிக்கிறாய்ங்க!

முக்கிய செய்திகள்!!.!
பிரிவு உபச்சார விழா!
அன்பர்களே! உங்களுக்கு நான் கூற விரும்புவது யாதென்றால்...இந்த மாதம் 31 ஆம் தேதி திருவாளர்.2018 ஓய்வு பெறுகிறார்.....
அவருடைய
12 மனைவிகளும்,
52 பிள்ளைகளும்,
365 பேரக்குழந்தைகளும், டிசெம்பர் 31 அன்று , 23.59 மணிக்கு, இந்த பிரிவு உபச்சார விழாவற்கு வருகை தந்து சிறப்பிக்க உள்ளனர்!
திருவாளர்.2018 அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தங்களுக்கு நற்செய்தியாக கூறுவது என்னவென்றால்" திருவாளர் .2018 ஓய்வு பெறும் அப்பொழுதே உங்களுடைய அனைத்து பிரச்சனைகளையும் துக்கங்கள்,  வஞ்சகங்கள், ஏமாற்றங்கள், தோல்விகள், நிகாகரிப்பு,கெட்ட எண்ணங்கள் இன்ன பிறவற்றைகளையும் தன்னுடனே எடுத்து செல்லவதாக கூறியுள்ளார்!
அடுத்ததாக
குமாரர்.2019 பதவி ஏற்க போகிறார்!
குமாரர் 2019 கூறியதாவது..  நீங்கள் 2018ல், இழந்தவற்றிற்கு ஈடாக..  வெற்றி,நீண்ட ஆயுள், ஆரோக்கயம், அன்பு, மகிழ்ச்சியும், மன சமாதானம்,வற்றாத நிதியமும், தாளாத கீர்த்தியும், வளமையும் , இன்னபிர நீங்கள் நினைக்கும் அனைத்து நற்சிந்தனைகளையும் வாரி வழங்கப்போவதாக சூழுரைத்துள்ளார்!
இனிய 2019 வாழ்த்துகள்!!!

No comments:

Post a Comment