வணக்கம் இன்றுகஜா புயல் பாதிக்கப்பட்ட பேராவூரணி ஒன்றியம் நடுவிக்குறிச்சி கிராமத்தில், நமது இயக்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் திருமிகு ப.கனகராஜ் எம்.ஏ, எம்,எட் அவர்கள் சீரிய முயற்சியில் காங்கேயம் வாசகர் வட்டம் சார்பில்160 குடும்பங்களுக்கு. ₹ 1000 குறையாமால் பொங்கல் பொருட்கள், போர்வைகள், மாணவ செல்வங்கள் 100 பேருக்கு புத்தாடைகள் என நமது ஆசியர் சொந்தங்கள் மற்றும் காங்கேயம் தொழிலதிபர் உயர்திரு பொடராயன் உள்ளிட்டோர் வருகைதந்து நிவாரணம் வழங்கிய நிகழ்வுக்கு மக்கள் மட்டற்ற மகிழ்ச்சியும் நன்றியும்தெரிவித்த நிகழ்ச்சி மிகவும் நெகிழ்வுத் தன்மை கொண்டதாகும். இனிய நண்பர் கனகராஜ் அவர்கள் இந்த நிகழ்வு வரலாற்று பதிவாகும். இதில் ஏற்பாடுகளை மிகச்சிறப்பாக செய்த பட்டுக்கோட்டை கல்வி மாவட்டச் செயலாளர் திரு ச.இளமதியன் அவர்கள் ஏற்பாடும், திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைபுபாளர் திரு அ.முரளி ஏம்.ஏ பி.எட் அவர்கள் வருகையும் நிகழ்சிக்கு மிகவும் சிறப்பாகும். எனது அன்பு வேண்டுகோளை ஏற்று வருகை தந்து வாரி வழங்கி சென்றுள்ள காங்கேய ம் வாசகர் வட்ட நண்பருக்கும், குறிப்பாக தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் துணைத்தலைவர் திரு ப.கனகராஜ் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
No comments:
Post a Comment