Sunday, 13 January 2019

சோழர் பற்றிய இந்த செய்தி உண்மையா?

சோழர்களின் நீண்ட வரலாற்றில் விஜயாலய சோழனின் மரபு புகழ் பெற்று விளங்கிய காலமானது கி பி ஒன்பதாம் நூற்றாண்டு முதலான காலம் . சரி , அதற்கு இரண்டு நூற்றாண்டுகள் முன்பே , அதாவது தஞ்சையில் விஜயாலய சோழர்கள் ஆட்சி புரிவதற்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே , கடப்பை , கர்னூல் , அனந்தபூர் ( இன்றைய ஆந்திரம் ) ஆகிய பகுதிகளடங்கிய தெலுங்கு மாவட்டங்களில் சோழ அரசு ஒன்று தழைத்திருந்தது . இச்சோழ மன்னர் தாம் கரிகாலன் குடிவழியைச் சார்ந்தவர்கள் என்றே கூறிக்கொண்டனர் . அதற்கு ஆதாரம் … EPIGRAPHIA CARNATICA - பக்கம் 12 (7 ) . EPIGRAPHIA INDICA பக்கம் 11 மற்றும் மாலேபாடு செப்பேடுகள் .

ஆனால் இவர்களுக்கும் பண்டைய சோழர்களுக்குமான தொடர்புகள் என்ன என்பதை உறுதியாக கூறமுடியவில்லை ….

அப்படின்னா இங்கே யார் தான் தமிழர் ? நாகர்கள்னு கிளம்பாதீங்கப்பு …..

--கிஷோர் கே ஸ்வாமி

No comments:

Post a Comment