*தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் மற்றும் வருவாய் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட அழைப்பு*
**********************************
*நாள் : 20.01.2019 ஞாயிறு மாலை சரியாக 4:00 மணி*
*இடம் : கல்பனா லாட்ஜ், மத்திய பேருந்து நிலையம் அருகில் திருச்சிராப்பள்ளி.*
*தலைமை : திரு மா. நம்பிராஜ் அவர்கள், மாநிலத் தலைவர்*
*சிறப்பு அழைப்பாளர்.* *அண்ணன் திரு வா.அண்ணாமலை அவர்கள், அகில இந்திய செயலாளர் (ஐபெட்டோ)*
*பொருள் : ஜாக்டோ ஜியோ பொது வேலைநிறுத்த அறிவிப்பு, சனவரி 22 முதல் கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேலை நிறுத்தப் போராட்டத்தினை தீவிரமாக நடத்துதல் தொடர்பான இயக்கத்தின் பங்களிப்பினை நிலை நாட்டுதல் தொடர்பாக...*
*21.1.2019 தமிழகம் முழுவதும் 2381அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தொடங்கும் அரசின் கொள்கை முடிவும், இடைநிலை ஆசிரியர்களை மாற்றுப் பணியில் நியமனம் செய்துள்ள ஆணையினைப் புறக்கணித்து பணியில் சேராமல் ஜாக்டோ ஜியோ முடிவினை உறுதிப்படுத்துதல். நீதிமன்றத்தில் உடன் தடையாணை பெறுவதற்கு விரைந்து செயல்படுதல்*
*பொதுச்செயலாளரால் கொண்டுவரப்படுகின்ற இதர தீர்மானங்கள்.*
*எடுத்த முடிவுகளை எந்நாளும் காப்பதில் உறுதியுடன் நின்று செயல்படும் இயக்கப் பொறுப்பாளர்களே, இயக்கக் குடும்பத்து உறுப்பினர்களே உங்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களுடன் போர்க்குண வாழ்த்துக்களையும் ஒன்றிணைத்து தெரிவித்துக் கொள்கிறோம்.தமிழக அரசு, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களுக்கு எதையும் செய்யக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கிறது.பள்ளிக்கல்வித் துறையோ நெருக்கடி கால நிலைமையை அமல்படுத்தியது போல் எதைச் செய்தாலும் கேட்பதற்கு ஆளில்லை என்ற முடிவெடுத்து துறையினை சீரழித்து வருகிறார்கள். ஆசிரியர்களை சித்திரவதை செய்யத் தொடங்கி உள்ளார்கள். இனியும் நாம் கால அவகாசம் கொடுக்காமல் நாமும் நமது போராட்ட முடிவில் பிடிவாதமாகவும் உறுதியுடனும் நின்று இழந்த உரிமைகளை மீட்டெடுப்போம். இழப்பதை தடுத்து நிறுத்துவோம் என்ற உணர்வுடன் களத்தில் தொடருவோம். 85 ஜாக்டி போராட்டம், 88 ஜாக்டி ஜியோ போராட்டம்,2003 ல் டெஸ்மாவை எதிர்கொண்ட போராட்டம் இவற்றையெல்லாம் நடத்தி சமுதாயத்தையும் பாதுகாத்து இழந்த உரிமைகளை மீட்டெடுத்த இயக்கங்கள் தான் இன்றும் களத்தில் இறங்கி இருக்கிறார்கள் என்பதை இந்த அரசுக்கு உணர வைப்போம். வரலாற்றில் சங்கங்கள் என்றும் நிலைத்து நிற்கும் என்கின்ற நிலைப்பாட்டையும் இந்த அரசுக்கு உணர வைப்போம். வெற்றி பெறுவோம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் ஒன்று கூடுவோம். போதிய கால அவகாசம் இல்லாததால் அவசர செயற்குழு கூட்டுவதற்கான வாய்ப்பு இல்லை.அவசர கால கூட்ட முடிவுகள் முகநூல்(Facebook) மற்றும் புலனத்தின்(WhatsApp) வழியாக உங்களுக்கு ஒரு நொடியில் தெரியப் படுத்துவோம்.எடுத்த முடிவில் உறுதியுடன் இருப்போம்.*
*பொங்கலும் பொங்கட்டும் போர்க்குண உணர்வும் பீறிட்டு எழட்டும்.*
*இறுதி வெற்றி நமதே!* *போர்க்குண வாழ்த்துகளுடன்*
*அ. வின்சென்ட் பால்ராஜ்,*
*_பொதுச் செயலாளர்_*
No comments:
Post a Comment