Sunday, 13 January 2019

நீடாமங்கலம் சாலைக்கும் போக்குவரத்து நெருக்கடிக்கும் விடிவு காலம் உண்டா? நெடுஞ்சாலைத்துறைக்கு கொடுக்கப்பட்ட கோரிக்கைக்கு வந்த பதில்!

தமிழக முதல்வருக்கு நீடாமங்கலம் திருவாரூர் நாகப்பட்டினம் சாலையை சீரமைத்து தர வேண்டி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளைத் தவிர பிற பகுதிகளை மாநில நெடுஞ்சாலை துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அவற்றை சீரமைத்து தரவும் நீடாமங்கலம் மேம் பாலம் அமைத்து தரக்கோரி அளிக்கப்பட்ட விண்ணப்பத்திற்கு நெடுஞ்சாலைத் துறையிடமிருந்து இருந்து பதில் வந்துள்ளது. பதில் என்னவென்றால் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து தற்சமயம் மாநில நெடுஞ்சாலை துறைக்கு சாலையை கொண்டுவர முடியாது என்பதும் நீடாமங்கலம் மேம்பாலத்திற்கு 2013 லேயே ரயில்வே துறையிடம் நிதி அனுமதி க்கப்பட்டு விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இன்னமும் ஏன் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்று விபரம் கூறப்படவில்லை. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையை தற்காலிகமாக சீரமைப்பதற்காக 10 கோடி அளவிற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment