1990 களில் உலக வர்த்தக அமைப்பில் இந்தியா கையெழுத்திடக்கூடாது என்றும் GATT ஒப்பந்தத்தில் கையெழுத்திடக்கூடாதென்றும் ஒரு சாரார் (கம்யூனிஸ்டுகள்)கூக்குரல் இட்டார்கள். ஆனால் பின்னர் தங்கள் நிலைப்பாட்டில் இருந்த தவறை உணர்ந்தார்கள். அவற்றை நாம் புஸ்ததேவின் பேச்சுக்கள் முலம் அறிந்து கொள்ளலாம். இப்படிப்பட்ட "தொலைநோக்குப்பார்வையுடைய கம்யூனிஸ்டுகள் இன்று சி.வ.அ.மதலீட்டால் பாதிப்பு வரும் என்று கதறி அழுகிறார்கள். தங்கள் கட்சி அடித்தட்டு மக்களுக்கானது என்பதையே மறந்து வணிகர்களுக்கு குடை பிடிக்கிறார்கள். எந்த கடையின் கல்லா பெட்டியில் முதலாளி அமரவில்லையோ அங்கே தான் கணக்கு வழக்கு சரியாக இருக்கும்.விற்பனை வரியும் அரசுக்கு ஒழுங்கா கப்போய்ச்சேரும். வாட் வரியை தமிழ்நாட்டில் அமல்படுத்தாமல் கிடப்பில் போட்ட கலை ஞர் வாட் வரி அமல் படுத்திய பிறமாநிலங்களின் வருவாய் உயர்வதைப்பார்த்து பின்னர் தமிழ்நாட்டில் அமல்படுத்தினார். அதேபோல் ஜெயலலிதாவும் சி.வ.அ.மு.வை தமிழ்நாட்டில் அனுமதிப்பார்.ஏற்கனவே கூடங்குளம் பிரச்்சனையில் தவறான முடிவெடுத்ததால் இன்று தமிழகமே மின்தட்டுப்பாட்டில் தவிக்கிறது. ஒரு திட்டத்தின் விளைவை முன்கூட்டியே கணிக்கும் திறனை அரசியல்வாதிகள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment