Wednesday, 12 December 2012

எது இரட்டை வேடம்?

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு   அனுமதிக்கும் மசோதாவிற்கு லோக்சபாவில் ஆதரித்து  வாக்களித்துவிட்டு சென்னையில் கடையை ஆரம்பிக்க ஆயத்தப்பணிகளை செய்து கொண்டிருக்கும்  அமெரிக்க வால்மார்ட் நிறுவனத்தின் மீது  நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று  திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளதாக கம்யுனிஸ்டு கட்சி  கருத்து   தெரிவித்துள்ளது. இச்செயல்  இரட்டை வேடம் எனவும்
கண்டனம்  தெரிவித்துள்ளது.
சரிதான்!
இரட்டை வேடம்தான்!
ஒப்புக்கொள்ள லாம்!
ஆனால் ஒரு சின்ன டவுட்!
பாராளுமன்றத்தில்  எதிர்த்து வாக்களித்து விட்டு  இங்கு கடை போட அனுமதி அளித்த அ.தி.மு.க போடுவது  என்ன வேடம்?
திமுகவை கண்டித்து அதிமுகவை கண்டிக்காத கம்யூனிஸ்ட் போடுவது என்ன வேடம்?

No comments:

Post a Comment