அரசியல் கட்சி தலைவர்களின் நீண்டநாள் வேண்டுதலுக்கிணங்க பின்வரும் சேவைகள் எங்களால் வழங்கப்படுகிறது.
கட்சித்தலைவர்கள் தினசரி வெளியிடத்தேவையான அறிக்கைகள்,தீபாவளி,பொங்கல்,தமிழ்ப்புத்தாண்டு,ரம்ஜான்,பக்ரீத்,கிருஸ்த்துமஸ் பண்டிகைகளின்போது வெளியிடத்தேவையான வாழ்த்து அறிக்கைகள் அந்தந்த கட்சித்தலைவர்கள் பாணியிலேயே எழுதப்பட்டு உடனுக்குடன் கிடைக்கும்.
பெட்ரோல் விலை உயர்வு,டீசல் விலை உயர்வு,கேஸ் விலை உயர்வு கண்டன அறிக்கைகள் எப்போது கேட்டாலும் உடனே கிடைக்கும்.
தலைசிறந்த கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட கட்சித்தலைவர்களின் கொடும்பாவிகள் மொத்தமாகவும் சில்லரையாகவும் கிடைக்கும்.
காவிரி நீரைத்திறந்து விடாத கர்நாடகத்தைக்கண்டித்து கண்டன அறிக்கை,முல்லைப்பெரியாறு அணையை உடைக்க முயலும் கேரளத்தைக்கண்டித்து கண்டன அறிக்கைகள் அந்தந்த சீசனின்போது கிடைக்கும்.
தமிழகமீனவர்களைத் தாக்கும் இலங்கை கடற்படையினரை கண்டிக்கும் கண்டன அறிக்கைகள் ஆண்டு முழுவதும் கிடைக்கும்.
Thursday, 20 December 2012
பொலிடிக்ஸ் சொல்யூஷன்ஸ் (பி) லிமிட்டட்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment