Tuesday, 15 January 2019

எல்கேஜி, யூகேஜி அரசாணை ஒரு பார்வை

அங்கன்வாடிகளில் எல்கேஜி யுகேஜி தொடங்கப்பட்டு இடைநிலை ஆசிரியர்களை பணிநிரவல் முறையில் நியமிப்பது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையின் முக்கிய அம்சங்கள்: 

🌻இத்திட்டமானது மூன்றாண்டுகளுக்கு செயல்படும்.

🌻 தேர்ந்தெடுக்கப்பட்ட நடுநிலைப்பள்ளிகள் உடன் இணைந்து எல்கேஜி யுகேஜி வகுப்புகள் இயங்கும்.

🌻பள்ளி தலைமை ஆசிரியரின் கண்காணிப்பில் இருக்கும்.

🌻 பிற வகுப்பு மாணவ,மாணவிகளுக்கு வழங்கப்படுவதைப் போன்று

😊 4 செட் இலவச சீருடை,

😊  காலணிகள் வழங்கப்படும்.

மலைவாழ் பகுதி குழந்தைகளுக்கு 😊 ஷூ,
😊 ஸ்வெட்டர்  வழங்கப்படும்.

🌻இலவச பொருட்களுக்கான செலவினத்தையும், (ஆசிரியர்கள் ஊதியத்தையும்) பள்ளிக்கல்வித்துறை ஏற்கும்.

🌻உணவு தொடர்பான செலவினங்கள் ( பணியாளர் ஊதியம் உட்பட) சமூக நலத்துறையின் கணக்கில் வரும்.

🌻 இத்திட்டம் மூன்றாண்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நடுநிலைப்பள்ளிகளில் மாதிரித் திட்டமாக செயல்படுத்தப்படும்.

🌻 அதில் ஏற்படும் விளைவுகளை பொறுத்து அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும்.

No comments:

Post a Comment