*ஆற்றல்மிக்க ஆசிரியப் பேரினமே,*
*ஆசிரியர்களை சிறுமைப் படுத்த நினைக்கும் பள்ளிக்கல்வித் துறையின் எதேச்சதிகாரப் போக்கினைக் கண்டித்து வட்டார வாரியாக தன்னெழுச்சியாக களம்கண்ட போராளிகளுக்கு வீரவணக்கங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.* *அங்கன்வாடிகளில் துவங்கப்படும் LKG,UKG வகுப்புகளில் பணிபுரிய நமது இடைநிலை ஆசிரியர்களை மாறுதல் செய்து ஆணை வழங்கும் கலந்தாய்வினை தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக புறக்கணித்து அரசுக்கு நமது எதிர்ப்பையும், நமது ஒற்றுமையையும் பதிவு செய்துள்ளோம்.* *தன்னிச்சையாக ஆணைகளை தயாரித்து நேரிலோ அஞ்சல் மூலமோ அனுப்பும் நடவடிக்கைகளை கல்வித்துறை தொடங்கியுள்ளது.கட்டாயப்படுத்தி ஆணைகள் வழங்கினாலும் எவரும் பணியில் சேரவேண்டியதில்லை என ஜாக்டோஜியோ உறுதிபடத் தெரிவித்துள்ளது.3500 துவக்கப் பள்ளிகளை உயர்நிலை மேனிலைப் பள்ளிகளோடு* *இணைத்து தொடக்கக் கல்வித்துறையினை* முற்றிலும்
*அழித்தொழிக்கும் பள்ளிக்கல்வித்துறையின் நடவடிக்கைகளைக் கண்டித்தும்,*அங்கன்வாடிகளில் துவங்கப்படும் LKG,UKG வகுப்புகளில் நமது இடைநிலை ஆசிரியர்களை மாறுதல் மூலம் பணியமர்த்தும் நடவடிக்கைகளை முற்றிலும் கைவிட வலியுறுத்தியும் 18.01.2019 வெள்ளி மாலை மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற உள்ள எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தில் 100 சதவீத ஆசிரியர்கள் பங்கேற்கும் வகையில் களப்பணியாற்றிட பொறுப்பாளர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.*
*அ.வின்சென்ட் பால்ராஜ்* *பொதுச்செயலாளர்*
*தமிழக ஆசிரியர்* *கூட்டணி*
No comments:
Post a Comment