தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகை பதிவு கண்காணிக்க ஒரு ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் தயாரித்து வெளியிட்டுள்ளது.
இந்த அப்ளிகேஷன் ஆண்ட்ராய்டின் புதிய வெர்ஷன்களில் செயல்படுவதில்லை .
இதை எப்படி செயல்படுத்துவது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.
முதலாவதாக parallel space lite என்ற அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
பின்னர் அந்த அப்ளிகேஷனை ஓபன் செய்து அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அப்ளிகேஷன்களை சேர்த்துக் கொள்ளுங்கள் .
இப்பொழுது அப்ளிகேஷன் ஓபன் ஆகும் .
அதில் பிளஸ் குறியில் கிளிக் செய்யுங்கள். உங்கள் மொபைலில் ஏற்கனவே நீங்கள் இன்ஸ்டால் செய்துள்ள ஆப்கள் காட்டப்படும்.
இப்பொழுது உங்கள் போனில் ஏற்கனவே நீங்கள் இன்ஸ்டால் செய்துள்ள tnschools app எங்கு உள்ளது என்று பாருங்கள்.
நீங்கள் ஏற்கனவே இன்ஸ்டால் செய்துள்ள tnschools ஆப்பை கிளிக் செய்து சேர்த்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது tn schools ஆப்பானது Parallel space உள்ளே வந்துவிடும்.
இப்போது tnschools ஆப்பை கிளிக் செய்து open செய்தால் உடனே செயல்படத் தொடங்கும்.
No comments:
Post a Comment