Wednesday, 4 February 2015

தினம் ஒரு அரசாணை11

தினம் ஒரு அரசாணை11
------------------------------------------
மருத்துவ விடுப்பு யார். யார் எடுக்கலாம் ????????....... வழக்கில் மருத்துவ விடுப்பு என அழைக்கப்படும் மருத்துவ சான்றிதழ் பேரிலான ஈட்டா விடுப்பு என்பது ஒருவருடைய பணிக்காலம் அடிப்படையில் அதிக பட்சமாக 540 வரை அனுமதிக்கப்படுகிறது.
அரசாணை நிலை எண்;1119/பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை நாள் 28.9.79.
2ஆண்டுகள் வரை இல்லை
2--5---ஆண்டு ----90
5--10---ஆண்டு ---180
10--15--ஆண்டு --270
15--20--ஆண்டு --360
20ஆண்டுக்கு மேல் 540.

தொடர்ச்சியாக 60 நாள் வரை விடுப்பு எழுதலாம். தொழுநோய்,
புற்று நோய், காசநோய், இருதய அறுவை சிகிச்சை, சிறுநீரக அறுவை சிகிச்சை, எய்ட்ஸ் போன்ற நோய்களுக்கு பணிக்கால வரம்பு ஏதும் கிடையாது.
முன் இணைப்பு, பின் இணைப்பு என்பதுஎன்ன? ?
மருத்துவ விடுபைத் தொடர்ந்து வரும் சனி,ஞாயிறு பிற அரசு விடுமுறை நாட்களை பின் இணைப்பாக கருதி அனுமதி பெற்றால் போதுமானது. மருத்துவ விடுப்பு தொடங்கும் நாளுக்கு முன் உள்ள சனி,ஞாயிறு& அரசு விடுமுறை நாட்களை முன் இணைப்பாக கருதிட அனுமதி பெற வேண்டியதில்லை. பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை கடித எண்.64435/FR-5/94-5, நாள் 27.3.95.

No comments:

Post a Comment