Friday, 6 February 2015

அறிவுரை கதை

�� காட்டிலிருந்து �� புலி ஒன்று வழி தவறி ஒரு �� கார்ப்பரேட்
கம்பெனியின் �� ரெஸ்ட் ரூம்புக்குள்
நுழைந்துவிட்டது.

�� பதட்டத்துடன் இருந்த
அந்த புலி டாய்லெட்டின் ஓர் �� இருட்டு மூலையில் பதுங்கிக்கொண்டது.

�� மூன்று நாட்கள் மூச்சு காட்டாமல் இருந்த புலிக்கு �� பசி எடுத்தது.

�� நான்காவது நாள் பசி தாங்க முடியாமல்
�� ரெஸ்ட் ரூம்புக்குள் தனியாக வந்த
�� ஒருவரை அடித்துச் சாப்பிட்டது.
அவர், அந்த நிறுவனத்தின்
�� அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர்.

�� அவர் காணாமல் போனது அலுவலகத்தில்
யாருக்கும் தெரியாது,
யாருமே கண்டு கொள்ளவில்லை.

✌ இரண்டு நாட்கள் கழித்து, இன்னும்
ஒரு �� நபரை அடித்துச் சாப்பிட்டது புலி.

�� அவர், அந்த நிறுவனத்தின் �� ஜெனரல் மேனேஜர்.

�� அவரையும் யாரும்
தேடவில்லை, கண்டுகொள்ளவும்
இல்லை. (சொல்லப்போனால் அவர் அலுவலகத்தில்
இல்லையே என்று சந்தோஷப் பட்டவர்கள்தான் அதிகம்! ������).

�� இதனால் குளிர்விட்டுப் போன புலி,
�� நாம் வசிக்க ஏற்ற இடம் இதுதான் என்று தீர்மானித்து அங்கேயே தங்கிவிட்டது.

�� அடுத்த நாள் வழக்கம்போல்
ஒரு ��  நபரை அடித்துக் கொன்றது.
அவர் அந்த அலுவலகத்தின் பியூன்.

அலுவலக ஊழியர்களுக்கு ☕ காபி வாங்குவதற்காக
பிளாஸ்கை கழுவ ரெஸ்ட் ரூம்புக்கு வந்திருக்கிறார்.

�� சிறிது நேரத்தில் காபி வாங்கச் சென்ற
பியூனைக் காணவில்லையே என்று மொத்த
அலுவலகமும்
சல்லடை போட்டு தேடியது.

⏰ நெடுநேர
தேடுதலுக்குப் பின் ரெஸ்ட் ரூம்பில்
உயிரிழந்து கிடந்த. பியூனையும்,
அந்த ஆட்கொல்லி புலியையும்
கண்டுபிடிக்கிறார்கள்.

❎ புலி பிடிபடுகிறது ❎

          �� பாடம் ��

�� உங்கள் மீதான
�� மதிப்பை நிர்ணயிப்பது உங்கள் �� பதவியோ,
�� வசதி வாய்ப்போ அல்ல.

�� நீங்கள்
�� �� மற்றவர்களுக்கு எவ்வளவு உதவியாக
இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது.

No comments:

Post a Comment